பொது வீடமைப்பு குறித்துப் பிரதமர் லீ

பொது வீடமைப்பு குறித்துப் பிரதமர் லீ

1 mins read
71c404db-5fb4-45cb-85bd-fb24fd805605
-

பொது வீட­மைப்பு சிங்­கப்­பூ­ரர்­களுக்கு அணுக்­க­மான ஓர் அம்­சம் என்று பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­யி­ருக்­கி­றார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் விற்­ப­னைக்கு விடப்­படும் வீடு­களின் எண்­ணிக்கை பாதிக்­கப்­பட்­டது. 'பிடிஓ' வீடு­க­ளுக்­குக் காத்­தி­ருக்­கும் நேரம் அதி­க­ரித்­தது. மறு­விற்­பனை வீட்டு விலை­யும் அதி­க­ரித்­துள்­ளது. இத­னால் குடும்­பங்­கள் தங்­கள் வாழ்க்­கைத் திட்­டங்­களை மாற்­றிக்­கொள்ள நேரிட்­டது. வீடு எப்­போது கிடைக்­கும், கட்­டுப்­ப­டி­யான விலை­யில் கிடைக்­குமா போன்ற கவ­லை­கள் அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளன என்று பிர­த­மர் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டுள்­ளார்.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீயும் அவ­ரது சகாக்­களும் இதன் தொடர்­பில் விளக்­கம் அளித்­துள்­ள­னர். பிரச்­சி­னைக்­குத் தீர்­வு­காண அர­சாங்­கம் கடு­மை­யாக முயற்சி மேற்­கொண்­டுள்­ளது. தீர்­வு­காண்­போம் என்ற நம்­பிக்­கை­யும் உள்­ளது என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரர்­கள் யாரும் சொந்த வீடு குறித்து எக்­கா­லத்­தி­லும் கவ­லைப்­ப­டத் தேவை­யி­ருக்­காது என்­றார் திரு லீ. அடுத்­த­டுத்த தலை­மு­றை­யி­னர்க்­கும் இது சாத்­தி­ய­மா­கும் வகை­யில் நட­வ­டிக்­கை­கள் தொட­ரும் என்­றார் அவர்.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு வாங்­கத் திட்­ட­மி­டு­வோர் கழ­கத்­தின் இணை­யத்­த­ளத்­தில் அது­கு­றித்த விவ­ரங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளும்­படி அவர் கேட்­டுக்­கொண்­டார்.