வடக்கு-தெற்கு ரயில்பாதை தடத்தில் கோளாறு; ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு சீரானது

வடக்கு-தெற்கு ரயில்பாதை தடத்தில் கோளாறு; ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு சீரானது

1 mins read
13326232-1272-47a9-8023-02ba30dfaff6
-

வடக்கு-தெற்கு ரயில்­பா­தை­யில் நேற்­றுக் காலை உச்ச நேரத்­தில் தாம­தம் ஏற்­பட்­டது. ஏறக்­கு­றைய 25 நிமி­டங்­கள் வரை நீண்ட தாம­தத்­திற்கு, தடத்­தில் ஏற்­பட்ட கோளாறு கார­ணம் என்று கூறப்­பட்­டது.

மூன்று நாள்­களில் இரண்­டா­வது முறை­யாக இந்த ரயில்­பாதை­யில் காலை உச்ச நேரத்­தில் இவ்­வாறு தாம­தம் ஏற்­பட்­டது. செம்­ப­வாங் ரயில் நிலை­யத்­திற்­கும் அட்­மி­ரல்டி ரயில் நிலை­யத்­திற்­கும் இடை­யில் ரயில்­கள் தடம் மாறு­வ­தற்­கான விசை­யில் கோளாறு ஏற்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

நேற்­றுக் காலை 6.45 மணிக்கு இவ்­வாறு நேர்ந்­த­தாக எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டது.

பொறி­யா­ளர்­கள் நேரில் சென்று சரி­செய்ய வேண்­டும் என்று குறிப்­பிட்ட நிறு­வ­னம், கோளாறு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட உடன் பாது­காப்பு கருதி ரயில்­கள் மணிக்கு ஐந்து கிலோ­மீட்­டர் வேகத்­தில் மெது­வாக நகர்ந்­த­தா­கக் கூறி­யது.

இத­னால் பயண நேரத்­தில் 25 நிமி­டங்­கள் அதி­க­ரிக்­கக்­கூடும் என்று பய­ணி­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­பட்­டது.

நேற்­றுக் காலை ஏற்­பட்ட கோளாற்­றுக்­கும் கடந்த திங்­கட்­கி­ழமை ரயில் தடத்­தில் ஏற்­பட்ட கோளாற்­றுக்­கும் தொடர்­பில்லை என்று எஸ்­எம்­ஆர்டி கூறி­யது.

நேற்­றுப் பிற்­ப­கல் 12.40 மணி­ய­ள­வில் கோளாறு சரி­செய்­யப்­பட்­டு­விட்­ட­தாக நிறு­வ­னம் டுவிட்­ட­ரில் பதி­விட்­டது. அதன்பின் சிறிது நேரத்­தில் சேவை வழக்­க­நிலைக்­குத் திரும்­பி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.