இந்த ஆண்டின் நான்காவது வேலையிட மரணம் கண்ணாடிக் கதவு விழுந்து 53 வயது சிங்கப்பூரர் பலி

இந்த ஆண்டின் நான்காவது வேலையிட மரணம் கண்ணாடிக் கதவு விழுந்து 53 வயது சிங்கப்பூரர் பலி

2 mins read
f5d4083c-7a07-4e32-ba8e-dd976cb35077
-

அலெக்­சாண்­டிரா சேமிப்­புக் கிடங்­கில் கண்­ணா­டிக் கத­வு­களை இறக்­கி­ய­போது ஆட­வர் மூவர்­மீது ஒன்­பது கத­வு­கள் விழுந்­த­தில் காய­ம­டைந்த 53 வயது சிங்­கப்பூரர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்தார்.

அந்த ஆட­வ­ரும் காய­ம­டைந்த மற்­றொ­ரு­வ­ரும் தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

காய­ம­டைந்த மற்­றோர் ஆட­வரின் ஊழி­ய­ரின் உடல்­நிலை சீராக இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. மூன்­றாம­வ­ருக்கு எந்­த பாதிப்­பும் இல்லை.

இத­னை­ய­டுத்து, இவ்­வாண்­டில் வேலை­யிட விபத்­தில் மாண்­டோர் எண்­ணிக்கை நான்­காக உயர்ந்­து­விட்­டது.

விபத்­தைத் தொடர்ந்து, சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னம் தனது வேலை நட­வ­டிக்­கை­களை நிறுத்­தி­வைக்­கு­மா­றும் அந்­நி­று­வ­னத்­தின் வேலை நடை­மு­றை­களை மறு­ஆய்வு செய்ய வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தா­ரத் தணிக்கை அதி­காரி ஒரு­வரை நிய­ம­னம் செய்­யு­மா­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது என்று மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

மூன்று மாதங்­க­ளுக்கு புதிய வெளி­நாட்டு ஊழி­யர்­களை பணி­ய­மர்த்­து­வ­தற்கு நிறு­வ­னத்­திற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன், நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் பாது­காப்பு குறை­பாடு­கள் குறித்து மனி­த­வள அமைச்­சுக்கு தனிப்­பட்ட முறை­யில் அறிக்கை கொடுக்­க­வேண்­டும் என்­றும் சரி­செய்­வ­தற்கு நேரடி பொறுப்பை ஏற்க வேண்­டும் என்று அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

61, அலெக்­சாண்­டிரா டெரஸ் ஹார்­பர் லிங்க் காம்பி­ளக்ஸ் எனும் முக­வ­ரி­யில் இம்­மா­தம் 2ஆம் தேதி பிற்­ப­கல் 2.15 மணி­ய­ள­வில் இவ்­வி­பத்து நிகழ்ந்­தாக அமைச்சு கூறி­யது.

எடுத்­துச்­ செல்­லப்­ப­டும்­போது கொள்­க­லன்­களில் உள்ள கண்­ணா­டி­கள், சட்­டங்­கள் போன்­றவை மரப் பெட்­டி­க­ளுக்­குள் நிமிர்ந்த நிலை­யில் அடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும். ஃபோர்க்­லிஃப்ட்ஸ் போன்­ற­வற்­றைப் பயன்­படுத்தி பாது­காப்­பான முறை­யில் இறக்க வேண்­டும். பொருட்­களை கைமு­றை­யாக மாற்ற வேண்­டும் என்­றால், கொள்­க­ல­னில் உள்ள மற்ற பொருட்­கள் கவிழ்­வ­தைத் தடுக்க, முட்­டு­கள் அல்­லது பாது­காப்­புப் பட்­டை­கள் போன்­ற­வற்­றைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அறிக்கை குறிப்­பிட்­டது.

விபத்து குறித்து அமைச்சு விசா­ரித்து வரு­கிறது.

கட்­ட­டத்­தில் செயல்­படும் பிபிடி இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர், விசா­ர­ணை­யில் நிறு­வ­னம் முழு­மை­யாக ஒத்­து­ழைக்­கும் என்றார்.

பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் குடும்­பத்­தி­ன­ருக்கு நிறு­வ­னம் அனு­தா­பம் தெரி­விப்­ப­தா­க­வும், அவர்­களுக்கு அதி­க­பட்ச ஆத­ரவை வழங்க உறு­தி­பூண்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

2022ல் 46 பணி­யிட உயி­ரி­ழப்­பு­கள் பதிவாகின. 2016ன் 66 உயி­ரி­ழப்­பு­களுக்குப் பிற­கான அதி­க­பட்ச எண்­ணிக்கை இது.