2017ல் விடுதலையான 10ல் நால்வர் மீண்டும் குற்றம் செய்தனர்

2017ல் விடுதலையான 10ல் நால்வர் மீண்டும் குற்றம் செய்தனர்

2 mins read
9ba68f47-3d5c-4b64-9cf6-8d689afe35a8
-

சிங்­கப்­பூ­ரில் குற்­ற­வா­ளி­கள் என்று ஏற்­கெ­னவே தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு பிறகு 2017ல் சிறை­யில் இருந்து விடு­விக்­கப்­பட்ட 10 பேரில் சுமார் நான்கு பேர் வெளியே வந்து ஐந்­தாண்­டு­களுக்குள் மீண்­டும் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­னர்.

அவர்­கள் மீண்டும் கைதாகி சிறைத்­தண்­டனை பெற்­ற­னர். அல்­லது ஒருநாள் முன்­னி­லை­யா­கும்­படி அவர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அப்­படி மீண்­டும் குற்­றச்­செயல்­களில் ஈடு­பட்­ட­வர்­கள் பல­ரும் போதைப்­பொ­ருள் தொடர்­பான குற்­ற­வா­ளி­கள் என்­று சிங்­கப்­பூர் சிறைச்­சா­லை­கள் சேவைத் துறை புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறின.

விடு­த­லை­யா­னோர் மீண்டும் குற்­றச்­செ­யல்­க­ளைச் செய்­யும் இரண்­டாண்டு விகி­தம் 2020ல் 20.4% ஆக இருந்­தது.

இது, 2019ஆம் ஆண்­டின் அளவான 20.0%ஐவிட கொஞ்சம் அதி­கம். 2019ஆம் ஆண்­டின் அளவு 30 ஆண்டு­களில் இல்­லாத அள­வுக்கு மிகக் குறை­வா­னது.

உல­கத்­தி­லேயே மிகக் குறை­வான அள­வு­களில் இது ஒன்று என்று சிறைத் துறை கூறி­யது.

இத­னி­டையே, கடந்த மூன்­றாண்­டுக்­கும் மேற்­பட்ட கால­கட்­டத்­தின் புள்­ளி­வி­வ­ரங்­க­ளைப் பார்க்­கை­யில், போக்­கு­வ­ரத்து குற்­றங்­க­ளுக்­காக சிறைத்­தண்­டனை பெற்­ற­வர்­கள் அதி­கம்.

11 பேர் தூக்கிலிடப்பட்டனர்

இந்த எண்­ணிக்கை 2022ல் 984 ஆக­வும் இருந்­தது. 2021ல் 819 ஆக­வும் 2020ல் 734 ஆக­வும் இது இருந்­தது. போதை­யர் மறு­வாழ்வு நிலை­யத்­தில் சிகிச்சை பெற்ற மொத்த குற்­ற­வா­ளி­கள் எண்­ணிக்கை 2022ல் 3,337 ஆக இருந்­தது. இது அதற்கு முந்­தைய ஈராண்டு­ அள­வை­விட அதி­கம்.

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்­டில் 11 பேருக்­குத் தூக்­குத்­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

அவர்களில் மலேசியரான நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்பவர் ஒருவர். 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை 2019ல் கொண்டுவந்ததற்காக இவருக்கு 2010ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதற்கு முந்­தைய இரண்டு ஆண்­டு­களில் யாரும் தூக்­கி­லிடப்­ப­ட­வில்லை என்று புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

தூக்­குத்­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட அனை­வ­ருமே போதைப்­பொ­ருள் தொடர்­பான குற்­றங்­களைச் செய்­த­வர்­கள். 2007 முதல் தூக்­குத்­தண்­டனை பதி­வே­டு­ நடை­மு­றை­யில் உள்ளது.

அதன்­படி, 2018ல் 13 பேருக்குத் தூக்­குத்­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது. அதற்­குப் பிறகு சென்ற ஆண்­டில்­தான் ஆக அதி­க­மாக 11 பேர் தூக்­கி­லி­டப்­பட்­ட­னர். 2020, 2021ஆம் ஆண்டுகளில் யாருக்கும் தூக்­குத்­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

இதற்கு கொவிட்-19 கார­ணம் அல்ல. நிலு­வை­யில் இருக்­கும் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­கள் முதலான பல கார­ணங்­கள் உள்ளன.

இவற்­றுக்­கெல்­லாம் தீர்வு காணப்­பட்ட பிறகே தூக்­குத்­தண்­டனை நிறை­வேற்­றப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் தூக்­குத்­தண்­டனை நடை­மு­றை­யில் இருப்­ப­தற்கு மக்­க­ளி­டம் வலு­வான ஆதரவு உள்ளதாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம் 2022 செப்­டம்­ப­ரில் தெரி­வித்­தார்.

வேண்­டு­மென்றே கொலை செய்­வது, துப்­பாக்­கி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது, போதைப்­பொரு­ளைக் கடத்­து­வது போன்ற மிகக் கடு­மை­யான குற்­றச்­செயல்­களுக்கு அத்தண்­டனை தேவை என்று அவர்­கள் கரு­து­கி­றார்­கள்.