டிரேஸ்டுகெதர் செயலியை அகற்றலாம்; கருவியை ஒப்படைக்கலாம்

டிரேஸ்டுகெதர் செயலியை அகற்றலாம்; கருவியை ஒப்படைக்கலாம்

1 mins read
6e1078c2-48b2-49e5-a54b-7ed0229588fc
-

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் அகலு­வ­தால் 'டிரேஸ்­டு­கெ­தர்' செயலியை தங்­கள் கைப்­பே­சி­யில் இருந்து குடி­யி­ருப்­பா­ளர்­கள் இனி­மேல் அகற்­றி­வி­ட­லாம்.

நிறு­வ­னங்­கள் 'சேஃப்என்ட்ரி' செயலி பயன்­பாட்டை நிறுத்­தி­வி­ட­லாம் என்று சுகாதார அமைச்சு தெரி­வித்­தது.

இருந்­தா­லும் தேவை எனில் மறு­ப­டி­யும் பதி­வி­றக்­கம் செய்து கொள்­ளத் தோதாக இந்­தச் செய­லி­கள் தொடர்ந்து அவற்­றுக்­கான சேமிப்பு இடங்­களில் இருந்து வரும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று நடந்த கொவிட்-19 பணிக்­குழு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, டிரேஸ்­டு­கெதர் கரு­வியை வைத்­தி­ருப்­போர் அவற்றை வரும் திங்­கள் முதல் மார்ச் 12 வரை 108 சமூக நிலை­யங்­க­ளி­லும் மன்­றங்­க­ளி­லும் திருப்பி ஒப்­ப­டைக்­க­லாம்.

அவற்றை ஒப்­ப­டைத்­தால்­தான் அதைப் புதுப்­பித்து தேவைப்­ப­டு­வோ­ருக்கு மறு­பு­ழக்­கத்­திற்­கு­விட ஏது­வாக இருக்­கும் என்று ஆலோ­சனை கூறப்­பட்­டுள்­ளது.

கிருமி தொற்­றி­யி­ருப்­போர் இனி­மேல் டிரேஸ்­டு­கெ­தர் தக­வல்­க­ளைத் தாக்­கல் செய்ய வேண்­டாம். சேஃப்என்ட்ரி தக­வல்­களும் இனி சேக­ரிக்­கப்­ப­டாது என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.

இருந்­தா­லும் 2020 மே மாதம் நிகழ்ந்த ஒரு கொலை விவ­காரம் தொடர்­பான டிரேஸ்டுகெதர் தகவல்கள் கால­வ­ரம்­பின்றி வைத்­துக்­கொள்­ளப்­பட்டு இருக்கும் என்­றும் சுகாதார அமைச்சு கூறி­யது.