சிங்கப்பூரும் வியட்னாமும் தங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கும் வகையில் புதிய உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளன.
மின்னிலக்கம் மற்றும் பசுமைப் பொருளியல் துறையில் இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.
வியட்னாமியப் பிரதமர் பாம் மின் சின் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்துள்ளார்.
அப்போது பசுமை-மின்னிலக்கப் பொருளியல் தொடர்பில் நான்கு உடன்பாடுகள் கையெழுத்தாகின.
இது, எரிபொருள், நீடித்த நிலைத்தன்மை, உள்கட்டமைப்பு வசதிகள், மின்னிலக்கம், புத்தாக்கம் மற்றும் தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 2022ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது.
நேற்று இஸ்தானாவில் அரசாங்கங்களுக்கு இடையே கையெழுத்தான ஆவணங்களை பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் வியட்னாமிய திட்ட, முதலீட்டு அமைச்சர் நீயென் சி டுங்கும் பங்கேற்றனர்.
பிரதமர் லீ சியன் லூங், வியட்னாமியப் பிரதமர் சின் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையி லான 50 ஆண்டுகால அரச தந்திர உறவைக் கொண்டாடும் வகையில் ஆண்டு முழுவதும் நடைபெறும் பல்வேறு நடவடிக் கைகளின் தொடக்கமாக வியட் னாமியப் பிரதமர் சின்னின் பயணம் அமைகிறது. மூன்று நாள் பயணமாக அவர் சிங்கப்பூர் வந்துள்ளார்.
இஸ்தானாவில் நடைபெற்ற மதிய விருந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் லீ சியன் லூங், இரு தரப்பிலும் இரு தலைவர் களுக்கு இடையிலான புரிந்துணர்வு, அரசியல் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நீண்டகால, ஆழமான உறவு நீடிக்கிறது என்று குறிப்பிட்டார்.
பொருளியல் ஒத்துழைப்பு, மனிதவள மேம்பாடு தவிர இணையப் பாதுகாப்பு, கரிம வெளியேற்றத்தைக் குறைப்பது, நிலைத்தன்மைமிக்க உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற புதிய துறைகளிலும் இரு நாடுகளும் சேர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.
"சிங்கப்பூரும் வியட்னாமும் பல வட்டாரப் பிரச்சினைகளில் பொதுவான எண்ணத்தைக் கொண்டுள்ளன. ஆசியானை மையப்படுத்தும் கடப்பாடு, ஒற்றுமையை நிலைநாட்டுவது உள்ளிட்டவற்றில் நெருங்கிய பங்காளிகளாகத் திகழும் சிங்கப்பூரும் வியட்னாமும் நட்புறவை வரும் ஆண்டுகளில் வலுப்படுத்த வதை எதிர்பார்க்கின்றன என்றும் திரு லீ கூறினார்.
திரு சின் தமது உரையில் சிங்கப்பூருக்கும் வியட்னாமுக்கும் இடையிலான ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான உறவு பரஸ்பர நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் குறிப் தாகத் தெரிவித்தார்.

