ஆன்சன் இங்குக்கு 'எஸ்டி சிங்கப்பூரர்' விருது

ஆன்சன் இங்குக்கு 'எஸ்டி சிங்கப்பூரர்' விருது

1 mins read
8c7776a4-9aa9-4ecf-b93a-8afdda332cc5
-

இவ்­வாண்­டின் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழின் சிறந்த சிங்­கப்­பூர் விருது, பழைய கார் விற்­ ப­னை­யா­ள­ரான ஆன்­சன் இங்­குக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

தேவைப்­ப­டு­வோ­ருக்கு உணவு வழங்­கும் அறப்­பணி அமைப்பு ஒன்றை உரு­வாக்கி அவர் உதவி வரு­கி­றார்.

முன்­பின் அறி­யாத, மர­ணப் படுக்­கை­யில் கிடக்­கும் முதி­யோர்­க­ளின் கடைசி ஆசை­யை­யும் அவர் நிறை­வேற்றி வரு­கி­றார்.

இறு­திச் சடங்கு செய்­ய­வும் அவர் பணம் கொடுத்து உதவி செய்­து வருகிறார்.

சிங்கப்பூர் ராஃபிள்ஸ் ஹோட்­டலில் நேற்று நடை­பெற்ற நிகழ்வில் அதி­பர் ஹலிமா யாக்­கோப் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவ­ருக்கு விருது வழங்கி கௌர­வித்­தார்.

இவ்­வாண்டு எஸ்டி சிங்­கப்­பூ­ரர் விரு­துக்கு முன்­மொ­ழி­யப்­பட்டவர்­களில் சிலர் தங்­கள் உடல்­ந­லப் பிரச்­சி­னை­யு­டன் போரா­டும் அதே வேளை­யில் அதேபோன்று பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஆத­ரவு அளித்து உதவி வரு­வதை அதி­பர் ஹலிமா விழாவில் ஆற்றிய உரை­யில் சுட்­டிக்காட்­டி­னார்.

மனி­தா­பி­மான உதவி என்ற பொது எண்­ணத்­தில் அவர்­கள் அனை­வ­ரும் ஒன்­று­பட்டு வலி­மை­யு­டன் திகழ்­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இறு­திப் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றி­ருந்த சரண்­ஜித் சிங் வாலியா மற்­றும் பிரி­வின் சுராஜ் சாந்­த­கு­மார் ஆகியோர் போலந்­தில் ஒன்­றா­கச் சேர்ந்து ரஷ்யா-உக்­ரேன் போரில் பாதிக்­கப்­பட்ட அக­தி­க­ளுக்கு உணவு சமைத்­துக் கொடுத்­துள்­ள­னர்.

தன்­ன­ல­மின்றி சேவை­யாற்­றும் தனிச்­சி­றப்புமிக்க சிங்­கப்­பூ­ர­ருக்கு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்­பாட்­டில் யுபி­எஸ் சிங்­கப்­பூர் விரு­து­களை வழங்கி வரு­கிறது. இவ்­வாண்டு 8வது முறை­யாக எஸ்டி சிறந்த சிங்­கப்­பூ­ரர் விருது வழங்­கப்­ப­ட்டுள்ளது.