சிங்கப்பூரர்களின் பெருங்கவலை பருவநிலை மாற்றம்; மற்றவர்களின் கவலை வேலையின்மை

சிங்கப்பூரர்களின் பெருங்கவலை பருவநிலை மாற்றம்; மற்றவர்களின் கவலை வேலையின்மை

2 mins read
6dc6f590-b551-4ac3-b037-5503e4602b31
ஆய்­வில் பங்­கேற்ற சிங்­கப்பூரர்­களில் 60 விழுக்­காட்­டி­ன­ருக்கு மேல் பரு­வ­நிலை மாற்­றத்தை மிகப்­பெ­ரிய பிரச்­சி­னை­யா­கக் குறிப்­பிட்­டுள்­ள­னர். இதற்கு அடுத்­த­தாக அமெ­ரிக்கா-சீனா பூசல், சமூக-பொரு­ளி­யல் இடை­வெளி, வரு­மான ஏற்­றத்­தாழ்வு ஆகி­யவை முக்­கிய கவ­லை­க­ளாக உள்­ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

2023ஆம் ஆண்­டில் பரு­வ­நிலை மாற்­ற­மும் அடிக்­கடி மாறும் வானி­லை­யும் தென் கிழக்கு ஆசியா எதிர்­கொள்­ளும் முக்­கிய சவால்­கள் என்று சிங்­கப்­பூ­ரர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

ஆனால் மற்ற ஆசி­யான் நாடு­களில் வேலை­யின்மை, பண­வீக்­கம், வாழ்க்­கைச் செல­வி­னம், அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளுக்கு ஏற்­படும் நெருக்­கடி போன்­றவை கொவிட்-19 கொள்­ளை­நோய்க்கு அடுத்து பெருங்­க­வ­லை­க­ளாக விளங்­கு­கின்­றன.

தென்­கி­ழக்­கா­சிய ஆய்­வுக் கழ­கம்-யூசோப் இஷாக் கல்­விக் கழ­கம் மேற்­கொண்ட 'தென் கிழக்கு ஆசி­யா­வின் 2023ஆம் ஆண்­டின் நிலை' என்ற ஆய்­வின் முடி­வு­கள் நேற்று வெளி­யி­டப்­பட்­டன.

ஆசி­யான் அமைப்­பில் அங்­கம் வகிக்­கும் பத்து உறுப்பு நாடு களி­லி­ருந்து 1,308 பேர் ஆய்­வில் பங்­கேற்­ற­னர். அவர்­களில் 59.5 விழுக்­காட்­டி­னர் வேலை­யின்மை, பொரு­ளி­யல் மந்­தம் ஆகி­யவை பரு­வ­நிலை மாற்­றத்­தை­விட கவ­லை­ய­ளிப்­ப­தா­கத் தெரி­வித்து உள்­ள­னர். இதற்கு அடுத்­த­தாக 57.1 விழுக்­காட்­டி­னர் பரு­வ­நிலை மாற்­றம் குறித்து கவலை கொள் கின்­ற­னர்.

அதி­க­ரித்து வரும் சமூக-பொரு­ளி­யல் இடை­வெளி, வரு­மான ஏற்­றத்­தாழ்வு போன்­றவை அதி­க­ரிக்­கும் ராணு­வப் பதற்­றத்­து­டன் மூன்­றா­வது கவ­லை­க­ளாக இருக்­கின்­றன.

ஆய்­வில் பங்­கேற்ற சிங்­கப்பூரர்­களில் 60 விழுக்­காட்­டி­ன­ருக்கு மேல் பரு­வ­நிலை மாற்­றத்தை மிகப்­பெ­ரிய பிரச்­சி­னை­யா­கக் குறிப்­பிட்­டுள்­ள­னர். இதற்கு அடுத்­த­தாக அமெ­ரிக்கா-சீனா பூசல், சமூக-பொரு­ளி­யல் இடை­வெளி, வரு­மான ஏற்­றத்­தாழ்வு ஆகி­யவை முக்­கிய கவ­லை­க­ளாக உள்­ளன.

கல்­வி­மான்­கள், சிந்­த­னை­யா­ளர்­கள், ஆய்­வா­ளர்­கள், வர்த்­த­கப் பிர­தி­நி­தி­கள், குடி­மைச் சமூ­கம், அர­சாங்க சார்­பற்ற அமைப்­பு­கள், ஊட­கப் பிர­தி­நி­தி­கள், அர­சாங்க அதி­கா­ரி­கள், வட்­டார மற்­றும் அனைத்­து­லக அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் உள்­ளிட்­டோர் ஆய்­வில் கலந்­து­கொண்­ட­னர்.

ஆய்­வில் முக்­கிய கண்­டு­பி­டிப்­பாக 82.6 விழுக்­காட்­டி­னர் ஆசி­யானை வலு­வற்ற அமைப்­பா­கக் கரு­து­கின்­ற­னர். அர­சி­யல் மற்­றும் பொரு­ளி­யல் மாற்­றங்­களை சமா­ளிக்க முடி­யா­ததை அவர்­கள் கார­ண­மா­கச் சுட்­டிக் காட்­டி­யுள்­ள­னர். சிங்­கப்­பூ­ரில் மட்­டும் இன்­னும் கூடு­த­லாக 89.9 விழுக்­காட்­டி­னர் ஆசி­யான் அமைப்பை பல­வீ­ன­மா­கக் கரு­து­கின்­ற­னர்.

இவ்­வட்­டா­ரத்­தில் சீனா தொடர்ந்து செல்­வாக்கு வாய்ந்த பொரு­ளி­யல் சக்­தி­யா­கப் பார்க்­கப்­ப­டு­கிறது, இதற்கு அடுத்த நிலை­யில் அமெ­ரிக்கா உள்­ளது. ஆனால் சீனா­வுக்­கான 59,9% ஆத­ரவு, 2022 கணக்­கெ­டுப்­பில் தென்­பட்ட 76.7%லிருந்து குறைந்­துள்­ளது.