பிப்ரவரி 17ல் 'ஏ' நிலைத் தேர்வு முடிவு

பிப்ரவரி 17ல் 'ஏ' நிலைத் தேர்வு முடிவு

1 mins read
39cc183c-bac6-43af-b7cc-ba296dcd1549
-
Google News Preferred Icon

'ஏ' நிலைத் தேர்வு முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மேல் வெளியிடப்படுகிறது.

அன்று மாணவர்கள் தங்களுடைய பள்ளிகளில் இருந்து தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகமும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளன.

பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர்கள் மாண வருடன் வர அனுமதிக்கப் படுவர். தேர்வு முடிவுகள் வெளி யிடும் ஏற்பாடுகள் குறித்த விவரங்களை பள்ளியில் இருந்து தெரிந்து கொள்ளலாம். உடல் நலமில்லாதவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவர்கள், வெள்ளிக் கிழமை பிற்பகல் 3.15 மணியிலிருந்து தேர்வு முடிவுகளை https://str.sg/wvZs என்ற இணையத் தளம் வழியாகத் தெரிந்து கொள்ளலாம்.