வியட்னாமில் $1 பி. மதிப்புள்ள மேலும் ஐந்து தொழிற்பேட்டைகள்: செம்ப்கார்ப்

வியட்னாமில் $1 பி. மதிப்புள்ள மேலும் ஐந்து தொழிற்பேட்டைகள்: செம்ப்கார்ப்

2 mins read
a4626c86-c452-4614-ac25-9892075328d4
-

வியட்­னா­மில் கூட்­டாக மேலும் ஐந்து தொழிற்­பேட்­டை­கள் அமைக்­கப்­படும் என்று சிங்­கப்­ பூ­ரில் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள செம்ப்­கார்ப் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இத­னு­டன் சேர்த்து வியட்­னாம்-சிங்­கப்­பூர் கூட்டு ஒத்­து­ழைப்­பில் இயங்­கும் மொத்த தொழிற்­பேட்­டை­க­ளின் எண்­ணிக்கை 17க்கு அதி­க­ரிக்­கிறது.

வியட்­னாம் அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான 'பிகே­மெக்ஸ் ஐடிசி' எனும் நீண்­ட­கா­லப் பங்­காளியு­டன் புதிய தொழிற்­பேட்­டை­கள் கட்­டப்­படும்.

வியட்­னாம் பிர­த­மர் சிங்­கப்­பூ­ருக்கு வரு­கை­ய­ளித்­துள்ள சம­யத்­தில் புதிய கூட்டு தொழிற்­பேட்­டைக்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

வியட்­னா­மு­டன் சிங்­கப்­பூர் கொண்­டுள்ள பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்­பின் முக்­கிய அங்­க­மாக வியட்­னாம்-சிங்­கப்­பூர் தொழிற்­பூங்கா 1996ஆம் ஆண்­டில் முதல் முறை­யா­கக் கட்­டப்­பட்­டது.

இதை­ய­டுத்து 12 தொழிற்­பேட்­டை­கள் வியட்­னா­மின் வடக்கு, மத்­திய, தெற்கு வட்­டா­ரங்­களில் தற்­போது செயல்­பட்டு வரு­கின்­றன.

ஏறக்­கு­றைய 17 பில்­லி­யன் யுஎஸ் டாலர் ($22.6 பில்­லி­யன்) முத­லீ­டு­களை ஈர்த்­துள்ள இவை, 300,000 வேலை­களை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றன.

இந்­நி­லை­யில் புதி­தா­கக் கட்­டப்­படும் வியட்­னாம்-சிங்­கப்­பூர் தொழிற்­பேட்­டை­கள் விவே­கத்­ து­டன் நீடித்த நிலைத்­தன்­மை­மிக்­க­தாக கட்­டப்­ப­டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது குறைந்த கரிம வெளி­யேற்­றத்தைக் கொண்டிருக் கும். மின்சக்திக்கு கட்­ட­டக் கூரை­களில் சூரிய சக்­தித் தக­டு­கள் பொருத்தப்பட்டிருக்கும் என்று செம்ப்­கார்ப் தெரி­வித்­தது.

எரி­பொ­ருள், தண்­ணீர் பயன்­பாடு, போக்­கு­வ­ரத்து, பாது­காப்பு ஆகி­ய­வற்றைக் கண்காணிக்க தொலை­தூ­ரக் கண்­கா­ணிப்­புச் சாத­னங்­கள் செயல்படும் என்­றும் அது கூறி­யது.

வியட்­னாம்-சிங்­கப்­பூர் தொழிற்­பூங்கா குழு­மத்­தின் இணைத் தலை­வ­ரும் செம்ப்­கார்ப் மேம்­பாட்­டின் தலைமை நிர்­வா­கி­யு­மான கெவின் டியோ, 2023ஆம் ஆண்டு 50 ஆண்­டு­கால இரு ­த­ரப்பு அர­ச­தந்­திர உற­வை­யும் சிங்­கப்­பூ­ருக்­கும் வியட்­னா­முக்­கும் இடை­யி­லான பத்து ஆண்டு உத்­தி­பூர்வ பங்­கா­ளித்­து­வத்­தை­யும் குறிக்­கிறது என்றார்.

"வியட்­னா­முக்­கான எங்­க­ளு­டைய கடப்­பாடு ஆழ­மா­னது, வலு­வா­னது," என்­றும் அவர் கூறி­னார்.

2022 மே மாத நில­வ­ரப்­படி 94.5 பில்­லி­யன் டாலர் மதிப்­புள்ள முத­லீ­டு­க­ளு­டன் வியட்­னா­மின் 2வது ஆகப்­பெ­ரிய முத­லீட்­டா­ள­ராக சிங்­கப்­பூர் விளங்­கு­வதாகத் தெரிவிக்கப்பட்டது.