உள்நாட்டு வருவாய் ஆணையம்: 10ல் 8 பேர் வருமான வரி படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டாம்

உள்நாட்டு வருவாய் ஆணையம்: 10ல் 8 பேர் வருமான வரி படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டாம்

2 mins read
822c856b-e60d-40a6-b4b2-2b042df7c2a2
-

2023ல் வரி செலுத்­து­வோ­ரில் பத்­தில் எட்­டுப் பேரின் வரு­மான விவ­ரம் தானா­கவே நிரப்­பப்­பட்டு தாக்­கல் செய்­யப்­ப­டு­கிறது. இரண்டு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட தனி­ந­பர்­க­ளின் வரு­மான வரி இவ்­வாறு தாக்­கல் செய்­யப் ­ப­டுவதாக உள்நாட்டு வருவாய் ஆணையம் தெரிவித்தது.

இவ்­வாண்டு 100,000க்கும் மேற்­பட்ட நிறுவனங்­கள், வரு­மா­னத்­தைத் தானாக சேர்த்­துக் கொள்­ளும் திட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றுள்­ளன.

இம்­முறை, இது­வரை இல்­லாத அள­வுக்கு அதிக நிறு­வ­னங்­கள் தானாக சேர்த்­துக்கொள்­ளும் திட்­டத்­தில் சேர்ந்­துள்ளதால் முன்­கூட்­டியே நிரப்­பப்­பட்ட படி­வத்தை முத­லா­ளி­கள் எளிதில் தாக்­கல் செய்­ய­லாம். மார்ச் 1ஆம் தேதிக்­குள் முத­லா­ளி­கள் தங்­க­ளு­டைய ஊழி­யர்­க­ளின் வரு­மா­ன வரி­யைத் தாக்­கல் செய்ய வேண்­டும் என்று உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் நினை­வூட்டியுள்­ளது.

ஏறக்­கு­றைய 1.7 மில்­லி­யன் வரி செலுத்­து­வோர், அதா­வது பத்­தில் ஏழு பேர் வரு­மான விவ­ரப் படி­வத்தை பூர்த்தி செய்ய வேண்­டி­ய­தில்லை. ஆனால் தங்­க­ளு­டைய வரு­மான விவ­ரங்­களை சரி பார்ப்­பது நல்­லது. வரிச்சலு­கை­கள் ஏதா­வது இருக்­கி­றதா என்­ப­தை­யும் தெரிந்­து­கொள்ள லாம் என்று ஆணை­யம் கூறி­யது.

வரிப் படி­வம் நிரப்ப அவ­சி­ய­மில்­லாத 1.7 மில்­லி­யன் வரி செலுத்­து­வோர் நேரடி வரு­மான வரி மதிப்­பீட்­டின் கீழ் வரு­கின்­ற­னர். இவர்­க­ளுக்கு வரு­மான வரி தாக்­கல் செய்­வ­தற்­கான அறி­விப்பு இல்­லா­மல் வரு­மான வரிக் கட்­ட­ணம் பற்­றிய விவ­ரம் அனுப்பி வைக்­கப்­படும். வரு­மான வரிக் கட்­ட­ணம் கிடைத்த பிற­கும் வரி செலுத்­து­வோர் தங்­க­ளு­டைய வரு­மான விவ­ரங்­களில் உள்நாட்டு வரு வாய் ஆணைய இணை­யத்தின் வழி­யாக மாற்­றம் செய்ய முடி­யும் என்று ஆணை­யம் கூறி­யது. ஆனால் வரிக்­கட்­ட­ணம் கிடைத்த முப்­பது நாள்­க­ளுக்­குள் மாற்­றத்தைச் செய்ய வேண்­டும்.