உயர்மட்டப் பாதுகாப்பு காலம் நீட்டிப்பு

உயர்மட்டப் பாதுகாப்பு காலம் நீட்டிப்பு

2 mins read
16366299-75c9-468e-b5cf-bc9d5ef01635
-

அபா­யம் நிறைந்த இடங்­களில் அம­லாக்­கப்­பட்ட உயர்­மட்டப் பாது­காப்பு நடை­மு­றை­கள் மேலும் மூன்று மாதங்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

வேலை­யி­டங்­களில் மர­ணங்­களை ஏற்­ப­டுத்­தும் விபத்­து­கள் கவ­லை­ய­ளிக்­கும் வகை­யில் அதி­க­ரித்­துள்­ள­தால் அத­னைக் குறைப்­ப­தற்­காக பாது­காப்­புக் காலத்தை நீட்­டிப்­ப­தாக மனி­த­வள அமைச்சு அறி­வித்­துள்­ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்­டம்­பர் 1ஆம் தேதி அபா­ய­முள்ள வேலை­யி­டங்­களில் ஆறு மாதக் காலத்­திற்கு உயர்­மட்ட பாது­காப்பு அம்­சங்­களை அமைச்சு நடைமுறைப்படுத்தியது. இது, இம்­மா­தம் 28ஆம் தேதி காலா­வ­தி­யா­க­வி­ருந்­தது.

இந்த நிலை­யில் 2023ஆம் ஆண்டு மே மாதம் வரை உயர்­மட்டப் பாது­காப்பு நடை­மு­றை­கள் நீடிக்­கும் என்று அமைச்சு கூறி­யுள்­ளது.

மர­ணம் அல்­லது மோச­மான காயம் ஏற்­படும் அள­வுக்கு வேலையிடப்­பா­து­காப்பு, சுகா­தா­ரச் சட்­டத்தை மீறு­வோ­ருக்கு அதிக அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

அதி­க­பட்ச அப­ரா­த­மாக 50,000 வெள்­ளி­ விதிக்கப்படும். இதற்கு முன்பு 20,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

அது மட்­டு­மல்­லா­மல் உயர்­மட்டப் பாது­காப்பு நடை­மு­றை­கள் நீட்­டிக்­கப்­பட்ட காலத்­தில் கூடு­தல் நட­வ­டிக்­கை­களும் நடப்புக்கு வந்துள்ளன.

வேலை­யி­டங்­களில் மோச­மான விபத்து அல்­லது உயிர்ச்­சே­தம் ஏற்­பட்­டால் அந்­நி­று­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி அல்­லது இயக்­கு­நர்­கள் கட்­டாய அரை நாள் பயிற்­சிக்குச் செல்­வது கூடு­தல் நட­வ­டிக்­கை­களில் அடங்­கும்.

உயர்­மட்ட பாது­காப்பு நடை­மு­றை­கள் அம­லில் இருந்­த காலத்­தில் வரு­டாந்­திர வேலை­யிட உயிர்ச்­சே­தம் குறைந்­த­தால் அமைச்சு மேலும் மூன்று மாதங்­க­ளுக்கு இந்நடைமுறைகளை நீட்­டிக்க முடிவு செய்­துள்­ளது. அதா­வது, 2022 ஜன­வரி முதல் ஆகஸ்ட் வரை­யில் 1.5 விகி­த­மாக இருந்த உயிர்ச்­சே­தம் செப்­டம்­பர் முதல் டிசம்­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில் 0.8 விகி­த­மா­கக் குறைந்­தது.

2022 முழு­வ­தும் உயிர்ச்­சேத விகி­தம் 100,000 ஊழி­யர்­க­ளுக்கு 1.3ஆக இருந்­தது.

ஆனால் 2022ல் பெரிய விபத்­து­களை ஊழி­யர்­கள் சந்­தித்­த­னர் என்று மனி­த­வள அமைச்சு குறிப் பிட்­டது.

நூறா­யி­ரம் ஊழி­யர்­க­ளுக்கு 16.8ஆக இருந்த பெரிய விபத்து களுக்­கான விகி­தம் 18.7க்கு அதி­க­ரித்­தது.

எனி­னும் பாது­காப்­புக் காலம் எல்­லாத் துறை­க­ளி­லும் ஒரே மாதி­ரி­யான விளை­வு­களை ஏற்­ ப­டுத்­த­வில்லை.

கட்­டு­மா­னத் தளங்­களில் மாதாந்­திர சரா­சரி உயிர்ச்­சேத, மோச­மான காயத்தை ஏற்­ப­டுத்­தும் விபத்­து­கள் குறைந்து நிலைமை மேம்­பட்­டுள்­ளது.

என்­றா­லும் போக்­கு­வ­ரத்து, சேமிப்­ப­கங்­களில் நிலைமை மேம்­ப­ட­வில்லை. இத்­து­றை­களில் அதிக விபத்­து­கள் பெரிய காயத்தை ஏற்­ப­டுத்­தும் விபத்­து­கள் நிகழ்ந்துள்ளன.