புதிய வீடுகளின் விலைகள் உயராது என பெரும்பாலானோர் எதிர்பார்ப்பு

1 mins read
06503865-844b-4341-99a7-3b139cf1f171
-

வீடு­க­ளைக் கட்டி விற்­ப­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் புதிய தனி­யார் வீடு­க­ளின் விலை உய­ராது என்றே கரு­து­கி­றார்­கள். சொத்துச் சந்தை நடத்­திய காலாண்டு ஆய்வு இவ்­வாறு தெரி­விக்­கிறது.

அடுத்த ஆறு மாதங்­களில் புதிய வீடு­க­ளின் விலை­யில் மாற்­றம் இராது என்று சென்ற ஆண்டு நான்­கா­வது காலாண்­டில் நடத்­தப்­பட்ட ஆய்­வில் கலந்­து­கொண்ட வீடு கட்டி விற்­போ­ரில் 71 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

இந்த அளவு 3வது காலாண்டு ஆய்­வின்போது 33% ஆக இருந்­தது. புதிய வீடு­க­ளின் விலை­கள் கொஞ்­சம் உய­ரும் என்று தாங்­கள் எதிர்­பார்ப்­ப­தாக ஆய்­வில் கலந்­து­கொண்­ட­வர்­களில் 29 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

விலை­கள் உய­ரும் என்று மூன்­றா­வது காலாண்டு ஆய்­வில் 56 விழுக்­காட்­டி­னர் எதிர்­பார்த்திருந்­த­னர்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் நிலச் சொத்து நகர ஆய்­வுப் பயி­ல­கம் அந்த ஆய்வை நடத்­தி­யது.

அடுத்த ஆறு மாத காலத்­தில் விற்­ப­னைக்கு விடப்­படும் புதிய வீடு­க­ளின் எண்­ணிக்கை கொஞ்­சம் அதி­க­மாக அல்­லது கணி­ச­மான அள­வுக்கு அதி­க­மாக இருக்­கும் என்று சுமார் 47 விழுக்­காட்­டி­னர் எதிர்­பார்க்­கி­றார்­கள்.