சிங்கப்பூர்-உத்தரப் பிரதேசம் பொருளியல் ஒத்துழைப்பு கூடும்

சிங்கப்பூர்-உத்தரப் பிரதேசம் பொருளியல் ஒத்துழைப்பு கூடும்

1 mins read
cccd151f-bc32-4239-917a-9946430b1eca
-

சிங்­கப்­பூ­ரும் அதன் நிறு­வ­னங்­களும் இந்­தி­யா­வின் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­து­டன் கூடிய பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பை மேலும் அதி­கப்­ப­டுத்­தும். முத­லீடு­க­ளை­யும் கூட்­டும்.

முத­லா­வது உத்­த­ரப் பிர­தேச உலக முத­லீட்­டா­ளர்­கள் உச்­ச­நிலை மாநாடு இம்­மா­தம் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை உத்­த­ரப் பிர­தே­சத்­தில் நடந்து வரு­கிறது.

அந்த மாநாட்­டில் ஜப்­பான், நெதர்­லாந்து, டென்­மார்க் ஆகி­ய­வற்­று­டன் சிங்­கப்­பூ­ரும் கலந்­து­கொள்­கிறது.

அந்த மாநி­லத்­தில் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் செய்­தி­ருக்­கும் முத­லீ­டு­களை எடுத்­துக்­காட்­டும் வித­மாக அந்த மாநாட்­டை­யொட்டி சிங்­கப்­பூர் கூடம் திறக்­கப்­பட்டு உள்ளது.

மாநாட்­டில் மொத்­தம் 21 சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­களும் 58 தொழில்­து­றைப் பிர­மு­கர்­களும் கலந்­து­கொள்­வார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பின் உத­வி­யு­டன், சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளுக்­கும் உத்­த­ரப் பிர­தேச மாநில அர­சுக்­கும் இடையே பேச்­சு­வார்த்­தை­கள் நடந்­தன.

அவற்­றின் விளை­வாக ஆறு புரிந்­து­ணர்வு குறிப்­பு­கள் கையெ­ழுத்­தி­டப்­ப­டு­கின்­றன.

இதன் மூலம் சிங்­கப்­பூ­ரின் ஆறு நிறு­வ­னங்­கள் அம்­மா­நி­லத்­தில் முத­லீ­டு­களை அதி­க­ரிக்­கும் என்று வர்த்­தக, தொழில் அமைச்சு தெரி வித்­தது.

உள்­கட்­ட­மைப்பு வசதி மேம்­பாடு, கழிவு நிர்­வாக துறை­யின் ஆற்­றல் மேம்­பாடு, தக­வல் தொழில்­நுட்­பப் பேட்­டை­கள், கணி­னித் தக­வல், கல்வி ஆகிய துறை­களில் அந்த முத­லீ­டு­கள் இடம்­பெ­றும்.

வர்த்­தக, தொழில் அமைச்சு உத்­த­ரப் பிர­தேச மாநில அர­சு­டன் புரிந்­து­ணர்வு குறிப்பு ஒன்­றில் கையெ­ழுத்­திட்­டது.

இதன்­படி சிங்­கப்­பூ­ரும் உத்­த­ரப் பிர­தேச மாநில அர­சும் பரஸ்­பர நலன்­க­ளுக்­கான பல்­வேறு துறை­களில் ஒத்­து­ழைக்­கும் என அமைச்சு தெரி­வித்­தது.