தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$1 மில்லியன் கையாடல்; மாதுக்குச் சிறை

1 mins read
b66859a0-e21b-4457-9be6-fd5fab516e72
-

நிதித்துறை மேலாளர் ஒருவர், தன்னுடைய முதலாளிக்குச் சொந்தமான US$774,500 (S$1.03 மில்லியன்) பணத்தைத் தவறாகக் கையாண்டு அதை ஃபேஸ்புக்கில் தனக்குப் பழக்கமான நண்பர் ஒருவருக்கு அனுப்பினார்.

டான் சென் நீ, 46, என்ற அந்த மேலாளருக்கு நேற்று மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் நம்பிக்கை மோசடி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்தக் குற்றச்செயல்கள் 2016 பிப்ரவரி 16ஆம் தேதிக்கும் 2017 ஜனவரி 17ஆம் தேதிக்கும் இடையில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளியான அந்த மாது நிறுவனத்தில் வேலையை இழந்துவிட்டார். இதுவரை US$53,400க்கும் அதிகத் தொகையை அவர் திருப்பிப் கொடுத்து இருக்கிறார்.