வேலை, கடன், இணையக் காதல் உள்ளிட்ட 886க்கும் மேற்பட்ட மோசடி விவகாரங்களில் தொடர்புடைய 434 பேரை காவல்துறை விசாரித்து வருகிறது.
அவர்களில் 296 பேர் ஆடவர்கள். 138 பேர் மாதர்கள். அவர்களுக்கு வயது 15 முதல் 82 வரை என்று காவல்துறை தெரிவித்தது.
அந்த மோசடிகளில் சிக்கிய அப்பாவிகள் $10.8 மில்லியனுக்கும் அதிகத் தொகையை இழந்து இருக்கிறார்கள் என்றும் காவல்துறை தெரிவித்தது.

