சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முன்னாள் தலைவரான லியூ முன் லியோங்கின் புதல்வரான கார்ல் லியூ காய் லுங், 45, மீது அரசாங்க அதிகாரியிடம் பொய் சாட்சியம் அளித்ததாகவும் பொய் தகவல்களைத் தெரிவித்ததாகவும் கடந்த 2020ஆம் ஆண்டில் குற்றம் சுமத்தப்பட்டது.
அந்தக் குடும்பத்திதின் முன்னாள் பணிப்பெண்ணான பார்டி லியானி வழக்கில் அவர் அப்படி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கார்ல் லியூ மார்ச் 30ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

