கிராப் சிங்கப்பூர் நிறுவனத்தில் எம்பி.யின் பொறுப்பு மாற்றம்

கிராப் சிங்கப்பூர் நிறுவனத்தில் எம்பி.யின் பொறுப்பு மாற்றம்

1 mins read
fb508bdf-7f02-48ce-8ad5-599aeda7b830
-

மக்­கள் செயல் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான டின் பெய் லிங், சென்ற வாரம் கிராப் சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­தின் பொது­உறவு, கொள்­கைப் பிரி­வின் இயக்­கு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டார்.

இதை எதிர்த்து கண்­ட­னக்­குரல்­கள் எழுந்­தன. இதை­யடுத்து அவர், அந்­தப் பொறுப்­பில் இருந்து மாற்­றப்­பட்டு, கிராப் சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­தில் நிறு­வன மேம்­பாட்­டுப் பிரி­வில் புதிய பொறுப்பை ஏற்­கி­றார் என்று நிறு­வ­னம் அறிக்கையில் தெரி­வித்­தது.

புதிய பொறுப்பு ஏற்­கும் திரு­வாட்டி டின், சிங்­கப்­பூ­ரில் கிராப் நிறு­வ­னத்­தின் பொது உறவு, கொள்­கைப் பணி­க­ளில் ஈடு­பட மாட்­டார்.

சிங்­கப்­பூர் அர­சாங்க அதி காரிக­ளு­டன் கூடிய பொதுக் கொள்கை விவா­திப்­பு­களில் அவர் கிராப் நிறு­வ­னத்­தைப் பிர­தி­நி­திக்கமாட்­டார் என்று அறிக்கை கூறி­யது.

இத­னி­டையே, இதன் தொடர்­பில் தனி­யாக அறிக்கை வெளி­யிட்ட மக்­கள் செயல் கட்சி, கிராப் நிறு­வ­னத்­தில் திரு­வாட்டி டின்­னின் பணி மாற்­றப்­பட்டு இருப்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யது.