16 வயதுக்கும் குறைந்தோர் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் 2019-2021 இடையில் 61% கூடின குடும்பத்தார் செய்யும் சிறார் பாலியல் கொடுமை அதிகம்

2 mins read
2dd9fea2-fa83-4609-b632-b8b71bd5adad
-

குடும்ப உறுப்­பி­னர்­கள், உற­வினர்­க­ளால், 16 வய­துக்­கும் குறைந்த சிறார்­கள் பாலி­யல் கொடு­மைக்கு ஆளான சம்­பவங்­க­ளின் எண்­ணிக்கை 2019லிருந்து 2021ல் 61% ஆகக் கூடி இருக்­கிறது.

உள்­துறை, சட்ட அமைச்­சர் கா சண்­மு­கம் இந்­தப் புள்­ளி­விவரங்­களைச் சென்ற திங்­கட்­கி­ழமை நாடா­ளு­மன்­றத்­தில் அல்­ஜு­னிட் குழுத்­தொ­குதி உறுப்­பி­ன­ருக்கு அளித்த பதி­லில் தெரி­வித்­தார்.

கடந்த 2021ல் இத்­த­கைய சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 247 ஆக இருந்­தது. இந்த எண்­ணிக்கை 2020ல் 186 ஆக­வும் 2019ல் 153 ஆக­வும் இருந்­தது.

சென்ற ஆண்டு ஜன­வ­ரிக்­கும் நவம்­ப­ருக்­கும் இடையே இத்­த­கைய 190 சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு 2021ஆம் ஆண்­டில் சிறார் கொடுமை தொடர்­பான 2,141 சம்­ப­வங்­கள் பற்றி புலன்­விசா­ரணை நடத்தியது.

இந்த எண்­ணிக்கை 10 ஆண்டுக் காலத்­தில் ஆக அதிக­மா­ன­தா­கும். 2020ஆம் ஆண்­டின் எண்­ணிக்­கை­யை­விட இது 63% அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்கது.

சிறார்­கள் தாக்­கப்­பட்ட சம்­ப­வங்­கள், பாலி­யல் ரீதி­யில் கொடு­மைப்­ப­டுத்­தப்­பட்ட சம்­ப­வங்­கள், அலட்­சி­யப்­ப­டுத்­தப்­பட்ட விவ­காரங்­கள் போன்­றவை இவற்­றில் அடங்­கும்.

இத­னி­டையே, சிறார்­கள் குடும்ப உறுப்­பி­னர்­க­ளையே அதி­கம் சார்ந்து இருக்­கி­றார்­கள் என்­ப­தால் தங்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­கள் பற்றி புகார் தெரி­விப்­பது அவர்­க­ளுக்கு மிகவும் சிர­ம­மான ஒன்­றாக இருக்­கிறது என்று மாதர் செய­லாய்­வுச் சங்­கத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் திரு­வாட்டி கொரினா லிம் கூறினார்.

பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் விவ­ரங்­களை வெளி­யிட முடி­யாத அள­வுக்குத் தடை உத்­த­ரவு இருக்­கும் என்­ப­தால் கொடு­மைக்கு இலக்­கா­கக்­கூ­டி­ய­வர்­கள் பயப்­பட வேண்­டிய தேவை இல்லை என்று 'இன்­விக்­டஸ் லா கார்ப்ப ரேஷன்' என்ற அமைப்­பைச் சேர்ந்த கோரி வோங் என்ற வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

பாதிக்­கப்­ப­டு­வோர் பள்­ளிக்­கூடங்­க­ளி­லும் உதவி நாட­லாம் என்­றார் அவர். சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் தத்­தெடுப்­புத் திட்­டம் நடப்­பில் இருக்­கிறது.

தத்­தெ­டுக்­கும் குடும்­பங்­கள், கொடு­மைக்கு ஆளான சிறார்­களுக்குப் பாது­காப்பு, உறை­விட வச­தி­களைச் செய்­து­கொ­டுக்­கின்றன என்­ப­தை­யும் அவர் சுட்டி­னார்.

காவல்­துறை இந்த ஆண்­டில் பாலி­யல் குற்­றச்­செ­யல் குடும்ப வன்­செ­யல் தள­பத்­தி­யம் ஒன்றை புதி­தாக அமைக்­க­வி­ருக்­கிறது.

அந்­தத் தள­பத்­தி­யம் பாலி­யல் குற்­றச்­செ­யல்­கள், குடும்ப வன்­செ­யல் சம்­ப­வங்­கள் அனைத்­தை­யும் மேற்­பார்­வை­யி­டும்.

மிக­வும் ஆற்­றல் வாய்ந்த அதி­கா­ரி­கள் அந்­தத் தள­பத்­தி­யத்­தில் பணி­யில் இருப்­பார்­கள்.