விலையேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை

விலையேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை

1 mins read
01f72883-f585-4339-b0ef-fd819d76dbbc
-

உணவு விலை­கள் கூடி­யுள்­ள­தைப் பற்­றி­யும் கூடு­தல் கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டு­வது பற்­றி­யும் சிங்­கப்­பூ­ரர்­கள் கடந்த சில மாதங்­க­ளாக சமூக ஊட­கத் தளங்­களில் புகார் செய்து வரு­கின்­ற­னர்.

இங்­குள்ள கடைக்­கா­ரர்­களில் சிலர் பொருள் சேவை உயர்­வைக் கார­ணம் காட்டி, விலையை ஏற்றி கொள்ளை லாபம் பார்ப்­ப­தாக உண­வங்­காடி, உண­வ­கக் கடைக்­கா­ரர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

கொள்ளை லாபம் ஈட்­டு­வ­தற்கு எதி­ரான செயற்­குழு 2022 ஏப்­ரல் 1ஆம் தேதி முதல் இவ்­வாண்டு ஜன­வரி 31 வரை, 286 புகார்­க­ளைப் பெற்­றது. அவற்­றில் 26, பொருள் சேவை வரியின் தவ­றான சித்­தி­ரிக்கப்பட்டதன் தொடர்­பி­லா­னவை. ஆனால் கடைக்­கா­ரர்­களின் சிர­மங்­கள் பல நேரங்­களில் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குத் தெரி­வ­தில்லை என்­றும் கூறப்­படுகி றது.

தமக்­குத் தேவை­யான மூலப் பொருள்­க­ளின் விலை ஐந்­தி­லி­ருந்து 10 விழுக்­காடு கூடி­யுள்­ள­தாக ஓர் உண­வக உரி­மை­யா­ளர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னார்.

மெக்­பர்­சன் ரோட்­டில் உள்ள ஹவுஸ் ஆஃப் சமோ­சாஸ் நிறு­வ­னத்­தின் நஜீரா ரொசெனி, 2022 தொடக்­கத்­தில் கிலோ $6.50ஆக இருந்த கோழி விலை தற்­போது இரட்­டிப்­பா­கி­விட்­டது என்­றார்.

லி னா ஃபிஷ்பால் நூடல்ஸ் கடை­யின் உரி­மை­யா­ளர் ஜீவன் ஆனந்­தன், 31, அண்­மைய வாரங்­களில் மின்­சா­ரம் தண்­ணீர்க் கட்­ட­ணம், வாடகை, பொருள்­க­ளின் விலை எல்­லாம் ஏறி­விட்­டது என்று கூறி­னார்.