உணவு விலைகள் கூடியுள்ளதைப் பற்றியும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றியும் சிங்கப்பூரர்கள் கடந்த சில மாதங்களாக சமூக ஊடகத் தளங்களில் புகார் செய்து வருகின்றனர்.
இங்குள்ள கடைக்காரர்களில் சிலர் பொருள் சேவை உயர்வைக் காரணம் காட்டி, விலையை ஏற்றி கொள்ளை லாபம் பார்ப்பதாக உணவங்காடி, உணவகக் கடைக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு எதிரான செயற்குழு 2022 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இவ்வாண்டு ஜனவரி 31 வரை, 286 புகார்களைப் பெற்றது. அவற்றில் 26, பொருள் சேவை வரியின் தவறான சித்திரிக்கப்பட்டதன் தொடர்பிலானவை. ஆனால் கடைக்காரர்களின் சிரமங்கள் பல நேரங்களில் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவதில்லை என்றும் கூறப்படுகி றது.
தமக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலை ஐந்திலிருந்து 10 விழுக்காடு கூடியுள்ளதாக ஓர் உணவக உரிமையாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
மெக்பர்சன் ரோட்டில் உள்ள ஹவுஸ் ஆஃப் சமோசாஸ் நிறுவனத்தின் நஜீரா ரொசெனி, 2022 தொடக்கத்தில் கிலோ $6.50ஆக இருந்த கோழி விலை தற்போது இரட்டிப்பாகிவிட்டது என்றார்.
லி னா ஃபிஷ்பால் நூடல்ஸ் கடையின் உரிமையாளர் ஜீவன் ஆனந்தன், 31, அண்மைய வாரங்களில் மின்சாரம் தண்ணீர்க் கட்டணம், வாடகை, பொருள்களின் விலை எல்லாம் ஏறிவிட்டது என்று கூறினார்.

