பொதுப் போக்குரத்தைப் பயன்
படுத்தும்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. நேற்று முதல் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோர் முகக்கவசம் அணியத் தேவையில்லை.
இருப்பினும், நேற்று பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்தோரில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
காலை நேர உச்சவேளையின்போது ஜூரோங் ஈஸ்ட், தோ பாயோ, பீஷான் ஆகிய எம்ஆர்டி நிலையங்களிலும் பங்கிட் எல்ஆர்டி நிலையத்திலும் மூன்றில் இரண்டு பயணிகள் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
அவர்களில் பள்ளி மாணவர்களும் முதியவர்களும் அடங்குவர். கிட்டத்தட்ட அனைத்து எம்ஆர்டி, எல்ஆர்டி நிலைய ஊழியர்களும் முகக்கவசம், கையுறைகள் ஆகியவற்றை அணிந்திருந்தனர்.
நேற்று எம்ஆர்டி ரயிலில் பயணம் செய்தபோது முகக்கவசம் அணிந்த பயணிகளில் 20 வயது திரு லோகநாதன் ஹேமந்த் சந்தரும் ஒருவர்.
பொதுப் போக்கு
வரத்தைப் பயன்படுத்தும்போது முகக்கவசம் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும் தாம் தொடர்ந்து முகக்
கவசம் அணிந்துகொள்ள இருப்
பதாக அவர் கூறினார்.
"எது வேண்டுமானாலும் நடக்கலாம். பாதுகாப்புடன் இருக்க விரும்புகிறேன். அலுவலகத்தில் இருக்கும்போதிலும் சாப்பிடும்போது மட்டுமே முகக்கவசத்தை அகற்றுவேன். அல்லது முகக்கவசம் சற்று அசௌகரியத்தை ஏற்படுத்தினால் அதை அகற்றுவேன். பெரும்பாலான நேரங்களில் முகக்கவசத்தை அணிந்திருப்பேன்," என்றார் அவர்.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதும் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது முகக்கவசம் தொடர்ந்து கட்டாயமாக இருந்தது.
இந்நிலையில், இம்மாதம் 13ஆம் தேதியிலிருந்து இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாக கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு கடந்த வியாழக்
கிழமையன்று அறிவித்தது.
கொவிட்-19 உடனான இயல்பு வாழ்க்கைத் தொடரும் அணுகுமுறையை சிங்கப்பூர் கடைப்
பிடித்து எச்சரிக்கை நிலையை மஞ்சளிலிருந்து பச்சைக்கு மாற்றியதை அடுத்து, இந்த முகக்கவசக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
உலகளாவிய, உள்ளூர் நிலையில் கொவிட்-19 கிருமித்தொற்றின் தீவிரம் குறைந்து சீரடைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகப் பணிக் குழு தெரிவித்தது.
குறிப்பாக, தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு ஒருவேளை கிருமித்தொற்று ஏற்பட்டால் அது இலேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவதை அது சுட்டியது.
இந்நிலையில், சுகாதாரப்
பராமரிப்பு நிலையங்களுக்குச் செல்லும் ஊழியர்கள், நோயாளிகள், நோயாளிகளைக் காணச் செல்பவர்கள் ஆகியோர் முகக்கவசம் அணிந்துகொள்ள
வேண்டும் என்று தெரிவிக்கப்
பட்டது.
இந்த விதிமுறை மருத்துவ
மனைகள், மருந்தகங்கள், தாதிமை இல்லங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

