இந்தியா செல்லும் பயணிகளை முகமலர செய்த மாற்றம்

3 mins read
62c3638a-49bf-48d4-8fb3-3758159a81c8
-

மோன­லிசா

சிங்­கப்­பூர் உள்­ளிட்ட ஆறு நாடு­களில் இருந்து வரும் பய­ணி­

க­ளுக்கு விதித்­தி­ருந்த கொவிட்-19 பய­ணக் கட்­டுப்­பா­டு­களை இந்­தியா தளர்த்­தி­ய­தை­ய­டுத்து பய­ணி­கள் மகிழ்ச்சி தெரி­வித்­துள்­ள­னர். நேற்று காலை 11 மணி­யி­லி­ருந்து இந்த நடை­முறை

அம­லுக்கு வந்­தது.

நாளை மறுநாள் சிங்­கப்­பூ­ரி­

லி­ருந்து பெங்­க­ளூ­ருக்கு தன்­னு­டைய மனைவி மற்­றும் மூன்று வயது மக­ளு­டன் செல்­கி­றார் 34 வயது ஷாஜ­ஹான் தாஜு­தீன். சென்ற மாதமே இதற்­காக விமான பய­ணச் சீட்­டு­களை முன்­ப­திவு செய்­தி­ருந்­த­வ­ருக்கு கொவிட்-19 பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் கலக்­கத்தை ஏற்படுத்தியது.

அண்­மை­யில் இவ­ரு­டைய நண்­பர் ஒரு­வர் இந்­தியா செல்ல எடுத்த பிசி­ஆர் பரி­சோ­த­னை­யில் தொற்று உறு­தி­செய்­யப்­ப­டவே வேறு­வ­ழி­யின்றி பய­ணத் தேதிக்கு ஒருநாள் முன் அதை ரத்து செய்ய ஏற்பட்ட நிலை தன்­னு­டைய இந்­தியா செல்­லும் திட்­டத்தை நிலை­யற்­ற­தாக்­கி­யது என்று தொண்டு நிறு­வ­னம் ஒன்­றில் மூத்த மேலா­ள­ரா­கப் பணி­

பு­ரி­யும் ஷாஜ­ஹான் பகிர்ந்­து­கொண்­டார்.

"12 வய­திற்குக் குறைவானவர் களுக்கு இப்­ப­ரி­சோ­தனை தேவை­யில்லை என்­ப­தால் நானும் என் மனை­வி­யும் மட்­டும் இப்­ப­ரி­சோ­த­னையை மேற்­கொள்­ள­லாம் என்று திட்­ட­மிட்­டி­ருந்­தோம். மேலும் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக பய­ணக் காப்­பீ­டும் எடுத்­தி­ருந்­தோம். இச்­சூ­ழ­லில் நேற்று முதல் இக்­கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டது மிகுந்த மகிழ்ச்­சியை அளிப்­ப­தோடு செல­வை­யும் மிச்­சப்­ப­டுத்­தி­யுள்­ளது," என்று கூறி­னார் ஷாஜ­ஹான்.

முன்­ன­தாக ஜன­வரி மாதம் 1ஆம் தேதி முதல் இந்­தியா செல்­வோர், பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு கொவிட்-19 கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்ய வேண்டும்.

அதுமட்டுமல்லாது, பய­ணத்­துக்கு முன்பு 'ஏர் சுவிதா' இணை­யத்­த­ளத்­தில் பரி­சோ­தனை முடி­வு ­க­ளைப் பதி­வேற்­றம் செய்ய வேண்­டும் என்­றும் இந்­தியா அறி­வித்­தி­ருந்­த­தை­யொட்டி

பய­ணி­கள் மிகுந்த சிர­மத்­திற்­

குள்­ளா­யி­னர்.

கடந்த மாதம் சிங்­கப்­பூ­ருக்கு தன் மனை­வி­யு­டன் வந்­தி­ருந்த திரு எச். ராமன் தன்­னு­டைய மனைவி எதிர்­பா­ராத வித­மாக கொவிட்-19 நோயி­னால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது சோதனை முடி­வு­களில் தெரிய வர, சிங்கப்பூரில் கூடுதலாக நான்கு முதல் ஐந்து நாள்­க­ளுக்கு தங்க வேண்டி இருந்தது.

"பரி­சோ­தைனை நட­வ­டிக்­கை­கள் மிக­வும் கடி­ன­மாக இருந்­தன. வேறு­வ­ழி­யின்றி பய­ணத்தை ஒத்­தி­வைக்க வேண்­டி­யி­ருந்­தது. இத­னா­லேயே சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து இந்­தியா செல்­லும் பலர் கோலா­லம்­பூர் வழி­யாகச் சென்­ற­னர்," என்று டைம்ஸ் ஆஃப் இந்­தியா நாளிதழிடம் கூறி­னார் திரு எச். ராமன்.

தன்­னு­டைய மகன் தேசிய சேவைக்கு செல்­வ­தற்கு முன் இந்­தி­யா­விற்கு குடும்­ப­மாக சென்று உற­வி­னர்­க­ளைக் காண திட்­ட­மிட்­டி­ருந்த 43 வயது ஷோபா கும­ரே­சன் திடீ­ரென்று அறி­விக்­கப்­பட்ட இக்­கட்­டுப்­பா­டு­க­ளால் செலவு அதி­க­மா­ன­தா­கக் கூறி­னார்.

பொங்­கல் பண்­டி­கை­யின்­போது செல்ல எண்­ணம் கொண்­டி­ருந்த இவர், பயண நிறு­வ­னம் மூலம் டிசம்­பர் மாதமே விமான பய­ணச்­சீட்­டு­களை முன்­ப­திவு செய்­தி­ருந்­தார். பண்­டி­கை­யா­த­லால் அதிக விலை­யில் பய­ணச்­சீட்­டு­களை வாங்­கி­யி­ருந்­தார்.

திடீ­ரென்று இந்­தியா அறி­வித்த பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளால் குடும்­பத்­தில் உள்ள மூவ­ருக்­கும் சேர்த்து 'பிசி­ஆர்' பரி­சோ­த­னைக்­காக $240 வெள்ளி கூடு­த­லாக செல­வா­ன­தாக அவர் வருத்­தம் தெரி­வித்­தார்.

இவ­ரைப் போலவே ஆண்­டுக்கு ஒரு­முறை பொங்­கல் பண்­டி­கைக்கு ஊருக்கு செல்­வதை வழக்­க­மாய் கொண்­டுள்ள வெளி­நாட்டு ஊழி­யரான 43 வயது மணி­யன் ராம­நா­தன், கூடு­தல் செல­வைத் தவிர்ப்­ப­தற்­காக இம்­முறை பய­ணத் திட்­டத்­தையே கைவிட்­டதை மிகுந்த வருத்­தத்­து­டன் தெரி­வித்­தார்.

இதற்கிடையே சென்ற மாதம் இந்தியா தன்னுடைய பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்த சூழலிலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் விமானங்களின் பயணிகளின் வரவில் பெரிதாக குறைவு ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.