வெளிநாடுகளிலிருந்து செயல்படும் சிங்கப்பூருக்கான கௌரவத் தூதர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வாரம் ஷங்ரிலா ஹோட்டலில் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்தக் கூட்டங்களுக்கு வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. ஒன்பதாவது முறையாக நடத்தப்படும் இக்கூட்டத்தில் 27 கௌரவத் தூதர்கள் கலந்துகொள்கின்றனர்.
தற்போது 29 நாடுகளி
லிருந்து செயல்படும் 34 கௌரவத் தூதர்களை சிங்கப்பூர் கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இவர்கள் உதவுகின்றனர். விசா விண்ணப்பம், கடப்பிதழ் புதுப்பிப்பிலும் உதவுகின்றனர். இப்பணி
களுக்காக இவர்கள் சம்பளம் பெறுவதில்லை. நேற்று முதல் நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.
சிங்கப்பூர் தூதர் இல்லாத நாடுகளில் இந்தக் கௌரவத் தூதர்கள் சிங்கப்பூரர்களுக்கு உதவுவதில் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பதாக அவர் புகழாரம் சூட்டினார்.
இந்தக் கௌரவத் தூதர்களின் பங்களிப்புக்குப் பிரதமர் லீ சியன் லூங் நன்றி தெரிவித்துள்ளார்.

