2022ல் தீச்சம்பவங்கள் குறைவு; மரணம் அதிகம்

2022ல் தீச்சம்பவங்கள் குறைவு; மரணம் அதிகம்

2 mins read
fde6f08a-2289-419d-b005-5f61a0caa332
-
multi-img1 of 2

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்டு தீச்­சம்­ப­வங்­களில் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­தது. இருப்­பி­னும் தீச்­சம்­ப­வங்­கள் சென்ற ஆண்டு குறைந்­தன. சென்ற ஆண்டு 1,799 தீச்­சம்­ப­வங்­கள் பதி­வா­யின. ஒப்புநோக்க 2021ல் இந்த எண்­ணிக்கை 1,844.

சென்ற ஆண்டு தீச்­சம்­ப­வங்­களில் ஆறு பேர் உயி­ரி­ழந்­த­னர். அதற்கு முந்­தைய ஆண்டு நால்­வர் உயி­ரி­ழந்­த­னர்.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை நேற்று வெளி­யிட்ட வரு­டாந்­த­ரப் புள்­ளி­வி­வர அறிக்­கை­யில் இத்­த­க­வல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

சென்ற ஆண்டு தீயி­னால் மாண்­டோ­ரில் பாதிப் பேர் கடந்த மே மாதம் பிடோக் நார்த் வட்­டார அடுக்­கு­மாடி வீட்­டில் மூண்ட தீயில் உயி­ரி­ழந்­த­வர்­கள். அச்­சம்­ப­வத்­தில் மூன்று வய­துச் சிறுமி, அவ­ளது தந்தை உள்­ளிட்ட மூவர் மாண்­ட­னர்.

சென்ற ஆண்டு மார்ச்­சில் நியூ அப்­பர் சாங்கி ரோட்­டில் உள்ள அடுக்­கு­மாடி வீட்­டில் மூண்ட தீயில் ஒரு­வர் உயி­ரழ்ந்­தார். அந்த வீட்­டில் ஒன்­பது பேர் கொண்ட குடும்­பம் குடி­யி­ருந்­தது.

மேலும் சென்ற ஆகஸ்டு மாதம் ஜூரோங் ஈஸ்ட் வட்­டார வீட்­டில் தீ மூண்­ட­தால் 48 வயது ஆட­வர் பலி­யா­னார்.

இந்த ஆறு­பேர் தவிர்த்து, சென்ற ஆண்டு மேலும் இரு­வர் உயி­ரி­ழந்­த­தா­க­வும் ஆனால் அது­தொ­டர்­பான விசா­ர­ணை­ இன்­னும் நிறை­வு­பெ­ற­வில்லை என்­றும் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

சென்ற ஆண்டு, தீயி­னால் காய­ம­டைந்­தோர் எண்­ணிக்கை குறைந்­தது. 2022ல் குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­களில் 935 தீச்­சம்­ப­வங்­கள் பதி­வா­யின. இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்­பி­டு­கை­யில், 7.4 விழுக்­காடு குறைவு.

இவற்­றில் பெரும்­பா­லான சம்­ப­வங்­க­ளுக்கு சமைக்­கும்­போது கவ­ன­மின்றி விடப்­பட்ட உண­வு­வகை­களே கார­ணம்.

மின்னூட்­டத்­தின்­போது தீ மூண்ட சம்­ப­வங்­கள் சென்ற ஆண்டு 18.8 விழுக்­காடு கூடின. இவற்­றில் பெரும்­பா­ல­னவை, மின் இணைப்பு வழங்­கும் கம்­பி­யில் கோளாறு அல்­லது மின்­க­ரு­வி­களில் ஏற்­பட்ட கோளாறு போன்­ற­வற்­றால் நேர்ந்­தவை.

மின்­தூக்கி, மாடிப்­ப­டி­கள், பொதுத் தாழ்­வா­ரங்­கள் போன்­ற­வற்­றில் முறை­யின்றி பொருள்­களை வீசு­வ­தால் தீ மூண்ட சம்­ப­வங்­கள் சென்ற ஆண்டு 31.7 விழுக்­காடு குறைந்­தன.

ஆனால், வாக­னங்­கள் தீப்­பி­டித்த சம்­ப­வங்­கள் 31.6 விழுக்­காடு அதி­க­ரித்­தன. தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னங்­கள், மின்­சைக்­கிள்­கள் உள்­ளிட்­டவை தீப்­பி­டித்த சம்­ப­வங்­கள் 2022ல் 33.3 விழுக்­காடு குறைந்­தன.

சென்ற ஆண்டு அவ­சர மருத்­துவ உதவி கோரும் தொலை­பேசி அழைப்­பு­க­ளின் எண்­ணிக்கை 20.2 விழுக்­காடு உயர்ந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

அவ­ச­ர­மற்ற உதவி அழைப்­பு­களும் சென்ற ஆண்டு 27.5 விழுக்­காடு அதி­க­ரித்­தன. உயி­ருக்கு ஆபத்­தான சூழல் இல்­லா­விட்­டால் 995 என்ற தொலை­பேசி எண்ணை அழைப்­ப­தைத் தவிர்க்­கும்­படி பொது­மக்­க­ளுக்கு ஆலோ­சனை கூறப்­பட்­டுள்­ளது.

அடுத்த மாதம் 13ஆம் தேதி­முதல் அவ­சர உதவி அழைப்­பு­கள் முத­லில் மதிப்­பீடு செய்­யப்­படும். உண்­மை­யான நெருக்­கடி நில­வி­னால் மட்­டுமே அவ­சர உதவி வாக­னங்­கள் அனுப்­பப்­படும். இந்­ந­டை­முறை குறித்து குடி­மைத் தற்­காப்­புப் படை­ 2022 ஜூனில் அறிவித்தது.