வெளிநாட்டு உணவுப்பொருள் அனுமதியின்றி விற்பனை; $13,500 அபராதம்

வெளிநாட்டு உணவுப்பொருள் அனுமதியின்றி விற்பனை; $13,500 அபராதம்

1 mins read
504e693a-c001-4c6a-abd0-f89bf0ba9c84
-

வெளி­நா­டு­களில் இருந்து உண­வுப் பொருள்­களை இறக்­கு­மதி செய்து இங்கு விற்­று­வ­ரு­கிறது 'லிட்­டில் ஃபார்ம்ஸ்' எனும் நிறு­வனம்.

இது, குளி­ரூட்­டப்­பட்ட ஆட்­டி­றைச்சி, கட­லு­ணவு வகை­கள் போன்­ற­வற்றை அதி­கா­ரி­கள் சோத­னை­யி­டு­வ­தற்கு முன்பே விற்­பனை செய்ய ஏற்­பாடு செய்­த­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­டது. இதைத் தொடர்ந்து நிறு­வ­னத்­திற்கு $13,500 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் உணவு அமைப்­பின் அதி­கா­ரி­கள் சோத­னை­யி­டு­வ­தற்­கும் சான்­றி­தழ் வழங்­கு­வ­தற்­கும் ஏது­வாக நிறு­வ­னம் ஏற்­பாடு செய்­யத் தவ­றி­ய­தாக அமைப்பு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இறைச்சி, மீன் வகை­களை சிங்­கப்­பூ­ருக்­குக் கொண்­டு­வர விரும்­பும் நிறு­வ­னங்­கள் இத்­த­கைய சோதனை முடிந்த பிறகே விற்­பனை அல்­லது விநி­யோ­கத்­தைத் தொடங்க வேண்­டும்.

'லிட்­டில் ஃபார்ம்ஸ்' நிறு­வ­னம் சென்ற ஆண்டு அக்­டோ­ப­ரில் இறக்­கு­மதி செய்த குளி­ரூட்­டப்­பட்ட ஆட்டு இறைச்சி, கடந்த ஆண்டு ஜூலை மாதத்­தில் இறக்­கு­மதி செய்த கட­லு­ணவு வகை­கள் ஆகி­ய­வற்­றுக்கு சிங்­கப்­பூர் உணவு அமைப்­பி­டம் சான்­றி­த­ழுக்கு விண்­ணப்­பிக்­க­வில்லை.

உண்ணத் தகுதியில்லாத உணவுப்பொருள்களைக் கண்டறிந்து அகற்றுவதற்கு இச்சோதனை அவசியம்.