'ரெட்டிட்' இணையத் தாக்குதல்: பயனாளர் தகவல் பாதிக்கப்படவில்லை

1 mins read
5e18069b-f1f4-4de7-aeff-1f05873d1e98
-

புகழ்­பெற்ற சமூக ஊட­கத்­த­ள­மான 'ரெட்­டிட்' இம்­மா­தம் 5ஆம் தேதி இணை­யத் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­னது. இணைய ஊடு­ரு­வி­கள் அத்­த­ளத்­தின் ஆவ­ணங்­கள், குறி­யீ­டு­கள் போன்­ற­வற்றை எட்ட முடிந்­தா­லும் பய­னா­ளர் தக­வல்­கள் ஏதும் கசி­ய­வில்லை என்று கூறப்­பட்­டது.

நிறு­வ­னத்­தின் தொடர்­புப் பட்­டி­ய­லைப்­போல் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த போலிப் பட்­டி­ய­லில் இருந்த தக­வல்­களை ஊடு­ரு­வி­கள் காண­மு­டிந்­தது. ஊழி­யர்­க­ளின் தொடர்பு விவ­ரங்­கள், விளம்­ப­ர­தா­ரர் தக­வல்­கள் அடங்­கிய ஆவ­ணங்­களும் ஊடு­ரு­வப்­பட்­ட­தாக நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

'ரெட்­டிட்' நிறு­வன ஊழி­யர்­களைக் குறி­வைத்த மின்­னஞ்­சல் மோச­டி­யின் விளை­வாக இவ்­வாறு நேர்ந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"மோசடி மின்­னஞ்­சல், நிறு­வன ஊழி­யர்­க­ளுக்­கான இணை­யத்­த­ளம் போன்றே உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த போலித்­த­ளத்­திற்கு இட்­டுச்­சென்­றது. அந்­தப் போலித்­த­ளம் ஊழி­யர்­க­ளின் '2எஃப்ஏ' எனப்­படும் இரண்டு அம்ச பாது­காப்பு நடை­மு­றை­யின் மறைச்­சொல்­லைத் திருட முற்­பட்­டது," என்­றார் அவர்.

ஒரே ஒரு ஊழி­ய­ரின் முக்­கி­யத் தக­வ­லைத் திரு­டிய பிறகு, இணை­யத் தாக்­கு­தல்­கா­ர­ரால் 'ரெட்­டிட்' நிறு­வ­னத்­தின் ஆவ­ணங்­கள் சில­வற்­றை­யும் வர்த்­த­கக் கட்­ட­மைப்­பை­யும் காண முடிந்­தது. திரு­டப்­பட்ட தக­வல்­கள் இணை­யத்­தில் கசி­ய­வில்லை என்று முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

பய­னா­ளர்­கள் இந்த இணை­யத் தாக்­கு­த­லால் பாதிக்­கப்­ப­டா­விட்­டா­லும்­கூட, தங்­கள் கணக்கு­ க­ளுக்கு '2எ­ஃப்ஏ' பாது­காப்பு நடை­மு­றை­யைப் பின்­பற்றி மறைச்­சொற்­களை அமைத்­துக்­கொள்­வது மேம்­பட்ட பாது­காப்பை வழங்­கும் என்று நிறு­வ­னப் பேச்­சா­ளர் பரிந்­து­ரைத்­தார்.

சில மாதங்­க­ளுக்கு ஒரு­முறை மறைச்­சொற்­களை மாற்­றி­ய­மைப்­பது நல்­லது என்­றார் அவர். மறைச்­சொற்­களை நிர்­வ­கிக்­கும் 'பாஸ்­வோர்ட் மேனே­ஜர்' மென்­பொ­ரு­ளைப் பயன்­ப­டுத்­தும்­ப­டி­யும் அவர் பரிந்­து­ரைத்­தார்.