பேரங்காடி ஊழியருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஆடவர் கைது

பேரங்காடி ஊழியருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஆடவர் கைது

1 mins read
c296c5e7-1d1c-46ab-bf10-3a40af3e54f0
-

சைனா டவுன் வட்­டா­ரத்­தில் உள்ள பேரங்­கா­டி­யின் ஊழி­ய­ரு­டன் சண்­டை­யிட்ட 45 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். நேற்று முன்­தி­னம் பிற்­ப­கல் 2.30 மணி­ய­ள­வில், எண் 1, பார்க் ரோட்­டில் உள்ள ஸ்கார்­லெட் பேரங்­கா­டிக் கிளை­யில் மூண்ட சண்டை குறித்­துத் தக­வல் கிடைத்­த­தா­கக் காவல்­துறை கூறி­யது.

பீப்­பிள்ஸ் பார்க் வளா­கத்­தில் செயல்­படும் இந்­தப் பேரங்­கா­டிக் கிளை 24 மணி நேர­மும் திறந்­தி­ருக்­கக்­கூ­டி­யது. இதில் பெரும்­பா­லும் சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி­யான பொருள்­கள் விற்­கப்­ப­டு­கின்­றன.

இணை­யத்­தில் பர­வும் காணொளி ஒன்­றில் கறுப்பு டி-சட்டை அணிந்த ஆட­வர் கடை ஊழி­ய­ரு­டன் கைக­லப்­பில் ஈடு­ப­டு­வ­தைக் காண­மு­டி­கிறது.

காசா­ளர்­கள் இவ்­வி­ரு­வ­ரின் சண்­டை­யைத் தடுக்க முயல்­கின்­ற­னர். பின்­னர் பொது­மக்­கள் சில­ரின் உத­வி­யு­டன் கடை ஊழி­யர், சண்­டை­யிட்ட ஆட­வரை வளைத்­துப் பிடித்­தார்.

சம்­பவ இடத்­துக்­குக் காவல்­து­றை­யி­னர் வரு­வ­தைக் காட்­டும் காணொ­ளி­களும் இணை­யத்­தில் இடம்­பெற்­றுள்­ளன.

ஆட­வர் சுய நினை­வு­டன் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­தா­க­வும் பின்­னர் அவர் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

ஆட­வ­ரு­டன் சண்­டை­யிட்ட 30 வயது ஊழி­ய­ருக்கு லேசான காயங்­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் அவர் மருத்­து­வ­மனை செல்ல மறுத்­து­விட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது. தற்­போது அவர் காவல்­து­றை­யி­ன­ருக்கு விசா­ர­ணை­யில் உத­வி­வரு­கி­றார்.