ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் தொகை உயர்த்தப்படுகிறது

1 mins read
da203557-59df-46da-b9e1-79a4038b44ae
$13,000 வரை ஆண்டு மதிப்புடைய வீடுகளில் வசிப்போருக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு மதிப்பு 2023ல் $500லிருந்து $700ஆக உயர்த்தப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தின்மூலம் பலனடையும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அத்திட்டத்தை மேம்படுத்தினார்.

இப்போது ஓய்வுபெற்றவர்களும் குறைந்த வருமானக் குடும்பங்களும் ஜிஎஸ்டி விகித உயர்வால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வழங்குதொகையை அதிகரிப்பதன் மூலம் அவர் இத்திட்டத்தை மேலும் மேம்படுத்துகிறார்.

$13,000 வரை ஆண்டு மதிப்புடைய வீடுகளில் வசிப்போருக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு மதிப்பு 2023ல் $500லிருந்து $700ஆக உயர்த்தப்படும்; 2024 முதல் அது $850ஆக உயர்த்தப்படும்.

$13,000 முதல் $21,000 வரை ஆண்டு மதிப்புடைய வீடுகளில் வசிப்போருக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு மதிப்பு 2023ல் $250லிருந்து $350ஆக உயர்த்தப்படும்; 2024 முதல் அது $450ஆக உயர்த்தப்படும்.