ஓய்வுக்காலக் கணக்கிலிருந்து மூத்தோருக்கு மாதம் குறைந்தது $350 கிடைக்கும்

ஓய்வுக்காலக் கணக்கிலிருந்து மூத்தோருக்கு மாதம் குறைந்தது $350 கிடைக்கும்

1 mins read
bce15216-38cc-4087-a466-aa9d8299b6ad
அடுத்த ஆண்டில் இருந்து ஓய்வுக்காலத் தொகைத் திட்டத்தின்கீழ் மூத்தோருக்கு மத்திய சேம நிதியிலிருந்து குறைந்தபட்சம் $350 மாதந்தோறும் வழங்கப்படும். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஓய்வுக்கால வழங்குதொகைத் திட்டத்தின்கீழ் மூத்தோருக்கு மத்திய சேம நிதியிலிருந்து வழங்கப்படும் குறைந்தபட்சத் தொகை மாதத்துக்கு 350 வெள்ளி ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

இன்று (14-02-2023) நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

2024ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து 55 வயது முதல் 70 வயதுள்ளவர்களுக்கான மத்திய சேம நிதிப் பங்களிப்புப் விகிதத்தை உயர்த்தவிருக்கிறது. அது அவர்களின் ஓய்வுக்காலத் தொகையை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

மூத்த ஊழியர்களுக்கான முத்தரப்புப் பணிக்குழுவின் அறிவுரைப்படி இதைச் செய்ததாக திரு வோங் குறிப்பிட்டார்.

இதனால் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.