தந்தையர் விடுப்பு அதிகரிப்பு

தந்தையர் விடுப்பு அதிகரிப்பு

2 mins read
8f5de851-4ad6-452e-902b-7dbe640f3ec8
-

சம்­ப­ளத்­து­ட­னான தந்­தை­யர் விடுப்பு இரட்­டிப்பாகியுள்­ளது. அடுத்த ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி அல்­லது அதற்­குப் பிறகு பிறக்­கும் குழந்­தை­க­ளின் தந்­தை­யர் இரண்டு வாரங்­க­ளுக்­குப் பதி­லாக நான்கு வார சம்­ப­ளத்­து­ட­னான தந்­தை­யர் விடுப்பு எடுத்­துக்­கொள்­ள­லாம். ஆனால் இந்­தக் கூடு­தல் தந்­தை­யர் விடுப்பை வழங்­கு­வதா இல்­லையா என்ற முடிவு முத­லா­ளி­க­ளி­டம் விடப்­ப­டு­கிறது.

கூடு­தல் விடுப்பு வழங்க தயா­ராக இருக்­கும் முத­லா­ளி­க­ளுக்கு அர­சாங்­கம் அதற்­கான செலவை ஏற்­கும்.

"மாற்­றத்­து­டன் பழ­கிக்­கொள்ள முத­லா­ளி­க­ளுக்குக் கூடு­தல் நேரம் தரும் வகை­யில் கூடு­தல் இரண்டு வார தந்­தை­யர் விடுப்­பைக் கட்­டா­ய­மாக்­க­வில்லை. குறிப்­பாக, தற்­போ­தைய பொரு­ளி­யல் நிலை­யு­டன் முத­லா­ளி­கள் பலர் எதிர்­நோக்­கும் மனி­த­வள, செயல்­முறை சவால்­கள் ஆகி­ய­வற்­றைக் கருத்­தில்கொண்டு இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது," என்று திரு வோங் தெரி­வித்­தார். இத்­திட்­டம் காலப்­போக்­கில் மறு­ஆய்வு செய்­யப்­படும் என்­றார் அவர். எதிர்­கா­லத்­தில் இந்­தக் கூடு­தல் இரண்டு வாரத் தந்­தை­யர் விடுப்­பைக் கட்­டா­ய­மாக்­கு­வதே இலக்கு என்று அவர் கூறி­னார்.

குழந்தை பிறப்­ப­தற்கு முன்பு தொடர்ச்­சி­யா­கக் குறைந்­தது மூன்று மாதங்­க­ளுக்கு சுய­தொ­ழில் செய்­யும், வர்த்­த­கத்­தில் ஈடு­படும் அல்­லது பணி­பு­ரி­ப­வர்­கள், கூடு­தல் தந்­தை­யர் விடுப்­புக்­குத் தகு­தி­பெ­று­கின்­ற­னர்.

சம்­ப­ள­மில்லாக் குழந்­தைப் பரா­ம­ரிப்பு விடுப்பு அதி­க­ரிப்பு

அடுத்த ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி­யி­லி­ருந்து சிறு பிள்­ளை­க­ளைக் கொண்ட பெற்­றோர் மேலும் அதி­க­மான சம்­ப­ள­மில்லாக் குழந்­தைப் பரா­ம­ரிப்பு விடுப்பு எடுக்­க­லாம் என்று துணைப் பிர­த­மர் வோங் தெரி­வித்­தார்.

சம்­ப­ள­மில்லாக் குழந்­தைப் பரா­ம­ரிப்பு விடுப்பு ஆண்­டுக்கு ஆறு நாள்­க­ளி­லி­ருந்து 12 நாள்­க­ளாக உயர்த்­தப்­ப­டு­கிறது. குழந்தை பிறந்து முதல் இரண்டு ஆண்­டு­களில் இந்த விடுப்பை பெற்­றோர் எடுத்­துக்­கொள்­ள­லாம்.

"புதி­தாக பிறந்த குழந்­தை­யைப் பரா­ம­ரிக்­க­வும் ஒன்­றாக நேரம் செல­வ­ழிக்­க­வும் அல்­லது குழந்­தை­யைப் பார்த்­துக்­கொள்­ளத் தேவை­யான ஏற்­பா­டு­க­ளைச் செய்­ய­வும் இந்­தக் கூடு­தல் விடுப்பு உத­வும்," என்­றார் திரு வோங்.

இந்­தக் கூடு­தல் விடுப்­பு­டன் சேர்த்து, குழந்தை பிறந்து ஓராண்­டுக்­குள் அதைப் பார்த்துக்கொள்ள வேலை செய்­யும் தம்­ப­தி­ய­ருக்­காக வழங்­கப்­படும் மொத்த விடுப்பு 22 வாரங்­க­ளி­லி­ருந்து 26 வாரங்­க­ளாக அதி­க­ரிக்­கிறது," என்று திரு வோங் தெரி­வித்­தார்.

தந்­தை­யர் விடுப்பு அதிகரிப்பு 34 வயது திரு பிர­பா­க­ரன் ராம­நா­தன் போன்ற தந்­தை­ய­ருக்கு உத­வக்­கூ­டும். தம்­மு­டைய இரு சிறு பிள்­ளை­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக தமது ஏழாண்டு ஆசி­ரி­யர் பணி­யி­லி­ருந்து விலகி சொத்து முக­வ­ரா­கத் தற்­போது இயங்கி வரு­கி­றார். குழந்­தைப் பரா­ம­ரிப்­பில் கூடு­தல் பங்கு வகிக்க இனி­வ­ரும் மாற்­றங்­கள் உத­வ­லாம் என அவர் கருத்து தெரி­வித்­தார்.

இனி அதி­க­ரிக்க இருக்­கும் குழந்தை போனஸ் ரொக்க அன்­ப­ளிப்பு, பிர­பா­க­ரன்-சரஸ்­வதி தம்­ப­தி­யி­ன­ருக்­குக் குழந்தை, கைக்குழந்தைப்

பரா­ம­ரிப்பு நிலை­யக் கட்­ட­ணங்­க­ளைச் செலுத்­து­வ­தற்­குப் பெரி­தும் கைகொ­டுக்­கும்.

மாதந்­தோ­றும் ஏறக்­கு­றைய $12,000 வரு­மா­னம் உள்ள இரு­வ­ருக்­கும், இரண்­டரை வயது மக­ளுக்­கும் நான்கு மாதப் பெண் குழந்­தைக்­கும் மொத்­தம் $4,000 வரை நிதி ஒதுக்­க­வேண்­டிய சூழல் உள்­ளது.