பணவீக்கத்தைச் சமாளிக்க குறைந்த வருமான குடும்பங்
களுக்கு உதவும் வகையில் சமூகநல அறக்கட்டளை நிதியில் $300 மில்லியன் நிரப்பப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
முக்கிய தேசிய சமூக உதவித் திட்டமான சமூகநல அறக்கட்டளை நிதியில் போதுமான நிதி இருப்பதை உறுதி செய்ய அதில் பணம் நிரப்பப்படுவதாக அவர் கூறினார். நிலைத்தன்மை, சுயசார்புநிலை, சமூக அளவிலான முன்னேற்றம் ஆகியவற்றை எட்ட குறைந்த வருமான குடும்பங்
களுக்குக் கூடுதல் உதவி
ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம் வாடகை வீடுகளில் பிள்ளைகளுடன் வசிக்கும் 14,000 குடும்பங்களுக்காக கடந்த ஓராண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

