உயரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவும் திட்டங்கள்

உயரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவும் திட்டங்கள்

2 mins read
2920bacd-73db-49e0-9b0d-3386889ced8d
-

பண­வீக்­கத்தை எதிர்­கொள்­ள­வும் பொருள், சேவை வரி அதி­க­ரிப்­பின் தாக்­கத்­தைக் குறைக்­க­வும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குக் கூடு­தல் உதவி வழங்­கப்­படும் என்று

வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை நேற்று தாக்­கல் செய்­த­போது தெரி­வித்­தார் துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங்.

$13,000 அல்­லது அதற்­கும் குறை­வான வரு­டாந்­திர மதிப்பு கொண்ட வீடு­களில் வசிப்­போ­ருக்கு வழங்­கப்­படும் பொருள், சேவை வரி பற்­றுச்­சீட்­டு­க­ளின் மதிப்பு இவ்­வாண்டு $500லிருந்து $700ஆக உயர்த்­தப்­படும். அடுத்த ஆண்­டி­லி­ருந்து இது $850ஆக ஏற்­றம் காணும்.

$13,000லிருந்து $21,000 வரை­யி­லான வரு­டாந்­திர மதிப்பு கொண்ட வீடு­களில் வசிப்­போ­ருக்கு இவ்­வாண்டு $350 வழங்­கப்­படும். இது அவர்­க­ளுக்கு முன்பு வழங்­கப்­பட்­ட­தை­விட $100 அதி­கம். இவர்­க­ளுக்கு வழங்­கப்­படும் தொகை அடுத்த ஆண்­டி­லி­ருந்து $450ஆக உய­ரும்.

இந்­தக் கூடு­தல் ஆத­ர­வுக்­காக ஆண்­டுக்கு $530 மில்­லி­யன் செல­வ­ழிக்­கப்­ப­டு­கிறது. 2024ஆம் ஆண்­டி­லி­ருந்து பொருள், சேவை வரி பற்­றுச்­சீட்­டுக்­காக அர­சாங்­கம் ஆண்­டு­தோ­றும் $1.7 பில்­லி­யன் செல­வ­ழிக்­கும்.

2020ஆம் ஆண்­டில் அறி

முகப்­ப­டுத்­தப்­பட்ட உத்­த­ர­வாத தொகுப்­புத் திட்­டத்­தில் கூடு­த­லாக $3 பில்­லி­யன் நிரப்­பப்­படும். இதன் விளை­வாக இத்­திட்­டத்­தின்­கீழ் வழங்­கப்­படும் தொகை $6.6 பில்­லி­ய­னி­லி­ருந்து $9.6 பில்­லி­ய­னாக ஏற்­றம் காண்­கிறது.

தகு­தி­பெ­றும் சிங்­கப்­பூ­ரர்

களுக்கு இத்­திட்­டத்­தின்­கீழ் வழங்­கப்­படும் ரொக்­கம் $300லிருந்து $650ஆக அதி­க­ரிக்­கப்­ப­டு­கிறது. இதன்­மூ­லம் 21 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்ட ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ருக்­கும் ஐந்து ஆண்­டு­களில் மொத்­தம் $700லிருந்து $2,250 வழங்­கப்­படும்.

பொருள், சேவை வரி அதி

கரிப்­பால் பெரும்­பா­லான குடும்­பங்­க­ளுக்கு குறைந்­தது ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஏற்­படும் கூடு­தல் செல­வு­க­ளை­யும் குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளுக்கு ஏறத்­தாழ பத்து ஆண்­டு­க­ளுக்கு ஏற்­படும் கூடு­தல் செல­வு­க­ளை­யும் இந்த உத்­த­ர­வாத தொகுப்­புத் திட்­டம் ஈடு­செய்­யும்.

அடுத்த ஆண்­டில் சமூக மேம்­பாட்டு மன்­றப் பற்­றுச்­சீட்டுகளின் மதிப்பு $100 கூடும். இதன் விளை­வாக அடுத்த ஆண்டு ஜன­வரி மாதத்­தில் சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளுக்கு $300 பெறு­மா­ன­முள்ள பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­படும்.

ஒரு­முறை வழங்­கப்­படும் உத­வித் திட்­டங்­கள் குறித்­தும் திரு வோங் நேற்று தெரி­வித்­தார்.

இவ்­வாண்டு 21 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்ட தகு­தி­பெ­றும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வாழ்க்­கைச் செல­வி­னம் சிறப்­புத் திட்­டத்­தின்­கீழ் $200லிருந்து $400 வரை கிடைக்­கும். தகு­தி­பெ­றும் 55 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்­டோ­ருக்­கும் மூத்­தோ­ருக்­கான வாழ்க்­கைச் செல­வின போனஸ் திட்­டத்­தின்­கீழ் $200லிருந்து $300 வரை வழங்­கப்­படும். அடுத்த மூன்று கட்­டங்­க­ளாக சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­படும் யூ-சேவ் தள்­ளு­படி இரட்­டிப்­ப­டை­கிறது. தகு­தி­பெ­றும் குடும்­பங்­க­ளுக்கு இவ்­வாண்டு $760 வரை­யி­லான யூ-சேவ் தள்­ளு­படி வழங்­கப்­படும்.

ஆறு வயது அல்­லது அதற்­கும் குறை­வான சிறு­வர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் அவ­ரது பிள்ளை மேம்­பாட்­டுக் கணக்­கில் $400 நிரப்­பப்­படும்.

அதை­விட அதிக வய­து­டைய சிறு­வர்­க­ளின் எடு­சேவ் கணக்­கில் அல்­லது உயர்க்­கல்வி கணக்­கில் $300 நிரப்­பப்­படும்.