செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
d8111200-d27a-4eed-a442-55f63dc95fd6
-

பிரதமர் லீ: நிச்சயமற்ற நிலையை கடந்து வர அரசாங்கம் உதவும்

பணவீக்கம், புவிசார் அரசியல் சவால்கள் எனப் பெரிதளவில் நிச்சயமற்ற ஒரு நிலையை நாடு சந்தித்து வர, சிரம காலத்தை கடந்துவருவதற்கு சிங்கப்பூரர்களுக்கு அரசாங்க உதவி இருக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று தெரிவித்தார்.

வர்த்தகங்கள், குடும்பங்கள், சிங்கப்பூரர்கள், குறிப்பாக குறைந்த வருமானப் பிரிவினர் மீது ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் வரவுசெலவுத் திட்டம் 2023 நன்கு ஆராயப்பட்ட மேம்பாடுகளை வழங்குகிறது என்று திரு லீ ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

முதியோர் பராமரிப்புக்கு $500 மி.

குறைந்த வருமானம் ஈட்டும் முதியவர்களில் மேலும் அதிகமானோருக்குத் தங்களின் மருத்துவச் செலவுகள் தொடர்பில் உதவி கிடைக்கவுள்ளது. முதியோர் பராமரிப்பு நிதித் திட்டத்தில் $500 மில்லியன் நிரப்பப்படுவதன் மூலம் இல்லம், நிலையம், குடியிருப்பு சார்ந்த பராமரிப்பை முதியவர்கள் பெறுவதற்கு ஆதரவு வழங்கப்படும்.

அத்துடன் மருத்துவ அறக்கட்டளை நிதி (மெடிஃபண்ட்) திட்டத்தில் $1.5 பி. நிரப்பப்படும். அரசாங்கக் கழிவுகள், காப்புறுதி, மெடிசேவ் ஆகியவை போக, மருத்துவம் தொடர்பான கட்டணங்களைச் சமாளிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் முதியவர்களுக்கு இது உதவும்.

சமூகத்தினரிடையே மேம்பட்ட ஆரோக்கியத்துடன் வாழும் மூத்தோர், தங்களின் பராமரிப்பு தொடர்பில் கூடுதல் ஆதரவைப் பெற முடியும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தமது வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.