மசே நிதி மாதச் சம்பள வரம்பு 2026ல் $8,000ஆக உயர்வு

மசே நிதி மாதச் சம்பள வரம்பு 2026ல் $8,000ஆக உயர்வு

3 mins read
2ea99616-1cc8-4b04-8c54-b44b3518da89
-

மத்­திய சேம நிதிச் சந்தா செலுத்­து­வ­தற்­கான மாதாந்­திர சம்­பள வரம்பு 2026ல் $8,000 ஆக உயர்த்­தப்­படும். சம்­ப­ளம் உயர்­வ­தால் அதற்­கேற்ப இந்த வரம்­பும் உயர்­கிறது. நடுத்­தர வரு­மான சிங்­கப்­பூ­ரர்­கள் ஓய்வு காலத்­திற்கு அதி­கத் தொகை­யைச் சேமித்து வைக்­க­வும் இது உத­வும். இப்­போது இந்த வரம்பு $6,000 ஆக இருக்­கிறது.

துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்த 2023 வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் இதை அறி­வித்­தார்.

முத­லா­ளி­களும் ஊழி­யர்­களும் இந்த மாற்­றத்­திற்­குத் தோதாக மாறிக்­கொள்ள ஏது­வாக இவை நான்கு கட்­டங்­க­ளாக படிப்­ப­டி­யாக நடப்­புக்கு வரும்.

அதா­வது 2023 செப்­டம்­பர் 1ஆம் தேதி­யிலிருந்து மாத வரு­வாய் வரம்பு $6,300 ஆகும்.

2024 ஜன­வரி 1 முதல் அந்த வரம்பு $6,800 ஆக அதி­க­ரிக்­கும்.

பிறகு 2025 ஜன­வரி 1 முதல் இந்த வரம்பு $7,400 ஆக­வும் 2026 ஜன­வரி 1 முதல் $8,000 ஆக­வும் உயர்த்­தப்­படும்.

55 வயது, அதற்கு குறைந்த வய­துள்ள ஊழி­யர்­கள் தங்­கள் சம்­ப­ளத்­தில் 20 விழுக்­காட்டுத் தொகையை மசே நிதிச் சந்­தா­வா­கச் செலுத்­து­கி­றார்­கள்.

அந்த ஊழி­யர்­க­ளின் முத­லாளி­கள் சம்­ப­ளத்­தில் 17 விழுக்­காட்­டுத் தொகை­யைச் சந்­தா­வாக செலுத்­து­கி­றார்­கள். இந்த ஏற்­பாடு மாறாது.

இருந்­தா­லும் சந்­தாக்­கள் மாதாந்­திர சம்­பள அடிப்­ப­டை­யில் நிர்­ண­யிக்­கப்­படும். இப்­போது $6,000 அடிப்­ப­டை­யில் நிர்­ண­யிக்­கப்­ப­டு­வ­தற்­குப் பதி­லாக 2026 ஜன­வரி 1ல் இருந்து $8,000 வரை என்ற வரம்­பின் அடிப்­ப­டை­யில் சந்தா நிர்­ண­யிக்­கப்­படும்.

மாத வரு­மான வரம்­பில் இடம்­பெ­றக்­கூ­டிய இந்த மாற்­றம் இதற்கு முன் 2016ல் இடம்­பெற்­றது. அப்­போது வரம்புத் தொகை $5,000லிருந்து $6,000 ஆக உயர்த்­தப்­பட்­டது.

மசே நிதி வரு­டாந்­திர சம்­பள வரம்­பு ஒன்­றும் நடப்­பில் இருந்து வரு­கிறது. இது மசே நிதிச் சந்­தா­வாக செலுத்­தப்­படும் கூடி­ன­பட்ச தொகையை நிர்­ண­யிக்­கிறது. இப்­போ­தைக்கு மசே நிதி வரு­டாந்­திர வரம்­பில் மாற்­றம் இருக்­காது என்று நிதி அமைச்­சின் அறிக்கை ஒன்று தெரி­வித்து இருக்­கிறது.

இருந்தாலும் இது காலக்­கி­ரம முறைப்­படி மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­படும் என்­றும் அது தெரி­வித்­துள்­ளது.

முதிய ஊழி­யர்­க­ளுக்­கு­ரிய சந்தா விகி­தத்தை 2024ல் அர­சாங்­கம் தொடர்ந்து உயர்த்­தும் என்­றும் துணைப் பிர­த­மர் வோங் தெரி­வித்­தார்.

2024 ஜன­வரி 1 முதல், 55லிருந்து 60 வரை வய­துள்­ள­வர்­ க­ளுக்­கான மசே நிதிச் சந்தா 1.5% கூடி 31% ஆக இருக்­கும்.

60 முதல் 65 வரை வய­துள்­ள­வர்­க­ளுக்கு சந்தா 1.5% கூடி 22% ஆகும். 65 முதல் 70 வரை வய­துள்­ள­வர்­க­ளுக்கு சந்தா 1% கூடி 16.5% ஆக இருக்­கும்.

இந்த சந்தா உயர்வு எல்லாம் மசே ­நிதி சிறப்­புக் கணக்­கில் சேரும். முதிய ஊழி­யர்­கள் இதன் வழி ஓய்வு காலத்­திற்கு அதி­கத் தொகை­யைச் சேர்க்கமுடி­யும்.

சந்தா தொகை கூடு­வ­தால் நிறு­வ­னங்­க­ளுக்­குச் செலவு கூடும். இதைக் கருத்­தில்­கொண்டு ஓராண்டு மசே நிதி ஈட்­டுத் தொகையை முத­லாளி களுக்கு அர­சாங்­கம் வழங்­கும்.

இந்­தத் தொகை 55 முதல் 70 வரை வய­துள்ள சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் முத­லா­ளி­கள் 2024ஆம் ஆண்­டில் செலுத்த வேண்­டிய கூடு­தல் சந்தா தொகை­யில் பாதி அள­வுக்கு ஈடு­செய்­து­வி­டும்.

முதி­ய­வர்­கள் ஓய்வு பெறும் போது அவர்­க­ளுக்­குக் கிடைக்­கக்­கூ­டிய தொகை திட்­டத்­தின் பேரில் கொடுக்­கப்­படும் குறைந்­த­பட்ச மசே நிதி மாதாந்­திரத் தொகை இப்­போது மாதம் ஒன்றுக்கு $250 ஆக உள்ளது.

இது மாதம் ஒன்­றுக்கு $350 ஆக உயர்த்­தப்­படும். இந்த ஏற்­பாடு இத்­திட்­டத்­தில் இடம்­பெற்று இருக்­கும் முதி­ய­வர்­கள் அனை­ வ­ருக்­கும் 2023 ஜூன் 1 முதல் தொடங்­கும்.

மசே நிதி சேமிப்­பில் பணம் இருக்­கும் வரை இந்­தப் பட்­டு­வாடா தொட­ரும். ஆயுள் முழு­வ­தும் பணம் பெற விரும்­பி­னால் 80 வய­துக்கு முன் எந்த நேரத்­தி­லும் முதி­ய­வர்­கள் சிபி­எஃப் லைஃப் திட்­டத்­தில் சேர்ந்து கொள்­ள­லாம் என்று நிதி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.