முதலீடுகளைக் கவர தேசிய உற்பத்தித் திறன் நிதிக்கு $4 பி.

முதலீடுகளைக் கவர தேசிய உற்பத்தித் திறன் நிதிக்கு $4 பி.

2 mins read
ba62c506-350a-45af-a72d-d4516a7e0885
-

தேசிய உற்­பத்­தித்­தி­றன் நிதி­யில் அர­சாங்­கம் $4 பில்­லி­யனை சேர்க்­கிறது. பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து உயர் ஆற்­றல்­மிக்க முத­லீ­டு­களை சிங்­கப்­பூ­ருக்­குக் கவர்ந்து ஈர்க்­கும் முயற்­சி­களை இரு மடங்கு ஆக்­கு­வது இதன் நோக்­கம்.

தேசிய உற்­பத்­தித்­தி­றன் நிதி 2010ல் அமைக்­கப்­பட்­டது. நிறு­வ­னங்­கள் தங்­க­ளு­டைய உற்­பத்­தித்­தி­ற­னைப் பெருக்கி ஊழி­யர் களுக்­குத் தொடர்ந்து தேர்ச்­சி­களை அளிக்க உத­வும் பல­த­ரப்­பட்ட செயல்­திட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு அளிப்­ப­தற்­காக இந்த நிதி அமைக்­கப்­பட்­டது.

இப்­போது இந்த நிதி­யின் இலக்­கு­கள் விரி­வு­ப­டுத்­தப்­படும். இதில் முத­லீட்டு மேம்­பா­டு­களும் உள்­ள­டங்­கும் என்று நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

தேசிய உற்­பத்­தித்­தி­றன் நிதி­யைப் பயன்­ப­டுத்தி சிங்­கப்­பூ­ருக்­குத் தர­மான முத­லீ­டு­களை அதி­க­மாக ஈர்க்க முயற்­சி­கள் இடம்­பெ­றும் என்­றார் திரு வோங்.

நிறு­வ­னங்­கள் புதுப்­புது ஆற்­றல்களை வளர்த்­துக்­கொள்ள, அதிக அள­வுக்கு மதிப்பை மேம்­ப­டுத்­திக்­கொள்ள, ஊழி­யர்­க­ளின் தேர்ச்­சி­களை மேம்­ப­டுத்த அந்த நிதி ஆத­ரவு அளிக்­கும்.

முடி­வில், இந்த முயற்­சி­கள் எல்­லாம் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு நல்ல சம்­ப­ளத்­து­டன் கூடிய வேலை­கள் கிடைக்க வகை செய்­யும் என்று திரு வோங் கூறி­னார்

பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் பல ஆண்டு கால­மா­கவே சிங்­கப்பூ ருக்கு வந்து எண்­ணெய், நிதி, மின்­னணு, மருந்­துத் துறை­களில் ஏரா­ள­மான முத­லீ­டு­க­ளைச் செய்­துள்­ளன. உலக திற­னா­ளர்­களும் இங்கு வர விரும்­பு­கி­றார்­கள். எனி­னும் பன்­னாட்டு நிறு வனங்­க­ளின் முத­லீ­டு­கள் இப்­போது உலகப் புவி­சார் நில­வ­ரங்களுக்­கும் அமெ­ரிக்கா, சீனா பொரு­ளி­யல் போட்­டா­போட்டி களுக்­கும் இடை­யில் சிக்கி விடக்­கூ­டி­ய­தாக தெரி­கிறது.

மிக­வும் அதி­கப் போட்டி நிறைந்த வளர்ச்­சித் துறை­களில் சிங்­கப்­பூர் ஒரு­மித்த கவ­னத்­தைச் செலுத்­தும். நிதி, போக்­கு­வ­ரத்து, தள­வா­டப் போக்­கு­வ­ரத்து, மின்­னணு, வேதிப்­பொ­ருள், உயி­ரி­யல் மருத்­துவ அறி­வி­யல் போன்ற துறை­கள் இவற்­றில் அடங்­கும்.

"சிங்­கப்­பூ­ரில் தலை­சி­றந்த வச­தி­கள், மதிப்­பு­மிக்க செயல்­பா­டு­கள் ஆகி­ய­வற்­றைக் கட்­டிக்­காத்து அவற்­றைக் கொண்டு புதிய ஆற்­றல்­க­ளைப் பலப்­ப­டுத்­து­வோம்.

"முக்­கி­ய­மான தொழில்­து­றை­களை மேம்­ப­டுத்­து­வோம். இவற்­றின்­மூ­லம் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு நல்ல வேலை­களை ஏற்­ப­டுத்­து­வோம்," என்று துணைப் பிரதமர் உறு­தி­பட தெரி­வித்­தார்.