வேலை-தேர்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏற்பாடு

வேலை-தேர்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏற்பாடு

1 mins read
229c2aa0-11e2-4ddc-a1b0-367e9ebfcdbc
-

அர­சாங்­கம், வேலை­க­ளை­யும் தேர்ச்­சி­க­ளை­யும் ஒருங்­கி­ணைக்­கும் நிறு­வ­னங்­களை வேலை-தேர்ச்சி ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக நிய­மிக்­கும். துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் நாடா­ளு­மன்­ற­த்தில் தாக்­கல் செய்த வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் இத­னைத் தெரி­வித்­தார்.

அதிகத் தேர்ச்சி என்­பது பொது­வா­கவே ஆக்­க­கரமான ஒன்­று­தான். எனினும் தொழில்­ து­றைக்கு ஏற்­பு­டை­ய­தாக தெரி­ய ­வ­ரும் அதிக ஆற்­றல்­மிக்க தேர்ச்சி­களை அடை­யா­ளம் காண்­பது என்­பது முதலாளி­கள்- ஊழி­யர்­கள் இரு­வ­ருக்­குமே சிர­ம­மாக இருக்­க­லாம். இத­னால்­தான் அர­சாங்­கம் அத்­த­கைய ஒருங்­கி­ணைப்­பா­ளரை நிய­மிக்­கிறது என்று திரு வோங் விளக்­கி­னார்.

பயிற்சி என்­பது ஒரு­வ­ருக்கு வேலை கிடைக்­கும் வாய்ப்­பு­களை அதி­க­மாக்­கும். அதிகச் சம்­ப­ளம் பெற­வும் அது வழி­வ­குக்­கும்.

இதைத் தொழில்­துறை, பயிற்சி அளிக்­கும் நிறு­வ­னங்­கள், வேலை தேடித் தரும் நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து அத்­த­கைய ஒருங்­கி­ணைப்பு நிறு­வ­னங்­கள் உறு­திப்­ப­டுத்­தும்.

ஊழி­யர்­க­ளுக்கு உத­வும் பல்­வேறு திட்­டங்­கள் செயல்­திட்­டங்­கள் பற்றி திரு வோங் அறி­வித்­தார். அவற்­றில் இது ஒன்­றா­கும்.

தொடர்ந்து வேலை பார்க்க விரும்­பும் முதி­யோ­ருக்கு அதிக ஆத­ரவு, குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் சிறந்த வாழ்க்­கைத்­தொழில் மேம்­பா­டு­க­ளைக் காண அதிக உத­வி­கள், முன்­னாள் குற்­ற­வா­ளி­கள் போன்ற ஊழி­யர்­கள் வேலை­க­ளைப் பெற உத­வு­வது அவற்­றில் அடங்­கும்.