பருவநிலை பாதிப்புகளை சமாளிப்போம்

பருவநிலை பாதிப்புகளை சமாளிப்போம்

1 mins read
1f6b598e-0f09-4b45-94f3-c21ecfdcf10f
-

சிங்கப்பூர், கொவிட்-19 தொற்றுமூலம் கற்ற பாடங்களைக் கொண்டு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மிரட்டல்களைச் சமாளித்து மீள்திறனைப் பலப்படுத்திக்கொள்ளும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.

இதைப் பொறுத்தவரை உள்கட்டமைப்பு வசதி முக்கியமான ஒரு துறையாக இருக்கும். மீள்திறனைப் பலப்படுத்துவதில் அரசு அதிக தொகையைச் செலவிடும். செம்மையான வழிகளில் நீடித்து நிலைக்கும் முதலீடுகளில் அரசாங்க நிதி பயன்படுத்தப்படுவது கட்டாயமானது என்றாரவர்.