2022ல் சாலை விபத்துகளில் கூடுதலான முதியோர் பாதிப்பு

2022ல் சாலை விபத்துகளில் கூடுதலான முதியோர் பாதிப்பு

2 mins read
9ea75dc4-a2ae-41ed-a5dd-84b3d2df2d56
-

சென்ற ஆண்டு சாலை விபத்­து­களில் 23 முதிய பாத­சா­ரி­கள் உயி­ரி­ழந்­த­னர். இது 2021ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 53.3 விழுக்­காடு அதி­கம்.

பாத­சா­ரி­கள் தொடர்­பான சாலை விபத்­து­களில் காய­ம் அடைந்த 60 அல்லது அதற்கு மேற்­பட்ட வய­துடையோர் எண்­ணிக்­கை­யும் சென்ற ஆண்டு அதி­க­ரித்­தது. 2022ல் 213 முதி­ய­வர்­கள் இவ்­வாறு காய­ம­டைந்­த­னர். 2021ல் இந்த எண்­ணிக்கை 193 ஆக இருந்­தது.

போக்­கு­வ­ரத்­துக் காவல்­துறை நேற்று வெளி­யிட்ட வரு­டாந்­த­ரப் புள்­ளி­வி­வர அறிக்­கை­யில் இந்­தத் தக­வல்­கள் இடம்­பெற்­று இருக்கின்றன.

சென்ற ஆண்டு சாலை விபத்­து­களில் உயி­ரி­ழந்­தோ­ரின் மொத்த எண்­ணிக்கை 108.

2022ல் பாத­சா­ரி­கள் உயி­ரி­ழந்த சாலை விபத்­து­களில் 70 விழுக்­காட்­டுச் சம்­ப­வங்­களில் 60 அல்­லது அதற்­கு­மேல் வய­தான முதி­ய­வர்­கள் சம்­பந்­தப்­பட்­டி­ருந்­த­தாக அறிக்கை குறிப்­பிட்­டது.

முதி­ய­வர்­கள், 'ஜே வாக்­கிங்' எனப்­படும் சாலை­வி­தி­களை அலட்­சி­யப்­ப­டுத்தி சாலை­யைக் கடப்­பது இத்­த­கைய மர­ணங்­க­ளுக்கு முக்­கி­யக் கார­ணம் என்று கூறப்­பட்­டது. மரணம் ஏற்படுத்திய சாலை விபத்துகளில் இத்தகைய விபத்துகளின் விகிதம் 73.9 விழுக்காடு.

சென்ற ஆண்டு சாலை விபத்­து­களில் காய­ம­டைந்­தோ­ரின் ஒட்­டு­மொத்த எண்­ணிக்கை 8,252க்கு உயர்ந்­தது. அதற்கு முந்­தைய ஆண்டு இவ்­வெண்­ணிக்கை 7,240 ஆக இருந்­தது.

சாலை விபத்­து­களில் முதிய பாத­சா­ரி­களும் மோட்­டார் சைக்­கி­ளோட்­டி­களும் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

பாத­சா­ரி­கள் சாலை­வி­தி­களை முறை­யா­கக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று அதி­கா­ரி­கள் கூறி­னர். சாலை­யைக் கடப்­ப­தற்கு முன்­பாக, வாக­னங்­கள் ஏதும் வரு­கின்­ற­னவா என்று கவ­னிப்­பது அவ­சி­யம். பாத­சா­ரி­க­ளுக்­கான 'ஸீப்ரா' கடக்­கு­மி­டத்­தைப் பயன்­ப­டுத்­தும்­போ­தும் இது முக்­கி­யம் என்று அவர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

சென்ற ஆண்டு, மது அருந்­தி­விட்டு வாக­ன­மோட்­டி­ய­தால் ஏற்­பட்ட விபத்­து­க­ளின் எண்­ணிக்­கை­யும் உயர்ந்­தது. இத்தகைய விபத்துகளில் 10 பேர் மாண்டனர்.

போக்­கு­வ­ரத்­துச் சமிக்­ஞை­யின் சிவப்பு விளக்கை மதிக்­கா­மல் வாக­ன­மோட்­டு­வோர் எண்­ணிக்கை 2022ல் ஏறக்­கு­றைய 2.3 விழுக்­காடு குறைந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.