தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'திருந்தி வாழ விரும்புவோர்க்கு ஆதரவு அளியுங்கள்'

2 mins read
752426d4-c8f3-433c-9db8-497361648d8c
சாதா­ரண சிங்­கப்­பூ­ரர்­கள் அன்­றா­டச் செயல்­கள் மூலம் சமூ­கத்­திற்­கா­கப் பணி­பு­ரி­வது இவ்­வாண்­டின் முழு­மைத் தற்­காப்பு தினத்­தின் கருப்­பொ­ரு­ளா­கும். இதற்­கேற்ப வாழ முயல்­கிறார் திரு அம்­ரிஷ் நாதன். படம்: மனநலக் கழகம் -

சாதா­ரண சிங்­கப்­பூ­ரர்­கள் அன்­றா­டச் செயல்­கள் மூலம் சமூ­கத்­திற்­கா­கப் பணி­பு­ரி­வது இவ்­வாண்­டின் முழு­மைத் தற்­காப்பு தினத்­தின் கருப்­பொ­ரு­ளா­கும்.

இதற்­கேற்ப வாழ முயல்­கிறார் திரு அம்­ரிஷ் நாதன் (படம்). பல பின்­ன­டை­வு­க­ளைக் கடந்து, தடம்­பு­ரண்ட தன் வாழ்வை மாற்­றி­ய­மைத்­த­வர் இவர்.

போதைப்­பொ­ருள், மது­பானம் ஆகி­ய­வற்­றின்­பால் ஈர்க்­கப்­பட்டு இளம்­வ­ய­தில் பல­முறை சட்­டத்தை மீறி­னார்.

வேலைப்­ப­ளுவை மறக்க நாடிய இவை பின்பு இவரை அடி­மைப்­ப­டுத்­தி­விட்­டன.

நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்­புக் கால­கட்­டத்­தில், கண்­காணிப்­புக் குழு­வின் நிபந்தனை களைப் பூர்த்தி செய்­யா­த­தால் ஐந்­தாண்­டு­களில் இரு­முறை இவ­ருக்­குச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தன்­னால் குடும்­பத்­தி­னர் கலங்­கி­யது மனத்தை உறுத்­தவே தன் வாழ்வை மறு­ப­ரி­சீ­லனை செய்­தார் அம்­ரிஷ்.

போதைப்­பொ­ருள்­களும் மது பான­மும் உடல்­நி­லை­யை­யும் வாழ்­வை­யும் சீர்­கு­லைத்­ததை உணர்ந்­தார். விடு­த­லை­யா­ன­ பிறகு ஒரு புது வாழ்­வைத் தொடங்க விரும்­பி­னார்.

"சிறைக்­கா­லம் தந்த வலி­யால் ஆழ்ந்த மன­வு­றுதி ஏற்­பட்­டது. என் தீய பழக்­கங்­களை முற்­றி­லும் ஒழித்­திட அது உத­வி­யது" என்­கி­றார் அம்­ரிஷ்.

தற்­போது மன­ந­லக் கழ­கத்­தின் 'ஃபோரென்­சிக் சைக்­கி­யாட்ரி கம்­யூ­னிட்டி சர்­வி­சஸ்' பிரி­வில் சக முன்­னாள் கைதி­க­ளுக்கு நிபு­ணத்­துவ ஆலோ­ச­க­ரா­கப் பணி­பு­ரி­கி­றார் 32 வயது அம்­ரிஷ் நாதன்.

மன­ந­லப் பிரச்­சினை உடைய சிறைக்­கை­தி­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தும் இவ­ரது பணி.

கடந்த மூன்று ஆண்­டு­களாக, திருந்­தி­வாழ விரும்­பும் முன்­னாள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு இவர் உத­வி­வ­ரு­கி­றார்.

தன்­னு­டன் இணைக்­கப்­படும் ஒவ்­வொரு குற்­ற­வா­ளி­யு­ட­னும் தனிப்­பட்ட முறை­யில் உரை­யாடி, அவர்­க­ளின் வாழ்க்­கைச் சவால்­க­ளைக் கேட்­ட­றிந்து, தனது அனு­ப­வங்­க­ளை­யும் வாழ்க்­கைப் பாடங்­க­ளை­யும் அவர்­க­ளு­டன் பகிர்ந்து ஆத­ரவு அளிக்­கி­றார் அம்­ரிஷ்.

முன்­னாள் குற்­ற­வா­ளி­கள் பழை­ய­நி­லைக்­குத் திரும்­பா­மல் பார்த்­துக்­கொள்­வது பெரும் சவால் என்று கூறும் இவர், அவர்­கள் கோபங்­கொண்டு குரலை உயர்த்­தி­னா­லும் பரிவு காட்­டு­கி­றார்.

பெற்­றோ­ரால் கைவி­டப்­பட்ட ஒரு சிறு­வன் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யாகி, மன­ந­லப் பிரச்­சி­னை­க­ளு­டன் போரா­டி­ய­நி­லை­யில் இவ­ரு­டன் இணைக்­கப்­பட்­டார்.

தான் வழங்­கிய ஆத­ர­வால் படிப்­ப­டி­யாக மேம்­பட்டு, அவர் பட்­டக்­கல்­வி­யும் முடித்­தி­ருப்­ப­தா­கப் பெரு­மி­தத்­து­டன் குறிப்­பிட்­டார் அம்­ரிஷ்.

முழு­மைத் தற்­காப்பு தினத்தை அனு­ச­ரிக்­கும் இவ்­வே­ளை­யில், முன்­னாள் குற்­ற­வா­ளி­கள் பற்­றிய பொது­மக்­க­ளின் பார்வை மாற­வேண்­டும் என்­பது இவ­ரது விருப்­பம்.

பெரும்­பா­லான குற்­ற­வா­ளி­கள், செய்த தவ­று­களை திருத்­திக்­கொள்ள விரும்­பு­கின்­ற­னர்.

அவர்­க­ளுக்கு ஆத­ரவு அளித்து நல்ல மனி­தர்­க­ளாக மாற அனைவரும் ஊக்­கு­விக்­க­லாம் என்­கி­றார் இவர்.