'படிப்படியாக உயரும் சம்பளமுறை தொடர்பில் ஊதியம் குறைந்ததாகத் தகவல் இல்லை'

'படிப்படியாக உயரும் சம்பளமுறை தொடர்பில் ஊதியம் குறைந்ததாகத் தகவல் இல்லை'

2 mins read
96337a36-1e64-4e6c-a163-613516c911ae
-

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­ப­ள­முறை யின்­கீழ் வழங்­கப்­படும் பயிற்­சி­யில் தேர்ச்சி பெறா­த­தால் யாரும் பதவி இறக்­கம் செய்­யப்­பட்­ட­தா­கவோ யாருக்­கும் ஊதி­யம் குறைக்­கப்­பட்­ட­தா­கவோ மனி­த­வள அமைச்­சில் புகா­ர­ளிக்­கப்­ப­ட­வில்லை.

மனி­த­வள மூத்த துணை­ய­மைச்­சர் ஸாக்கி முக­மது நாடாளு­மன்­றத்­தில் நேற்று இவ்­வாறு கூறி­னார்.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­ப­ள­முறை அம­லுக்கு வந்த பிறகு இத்­த­கைய சம்­ப­வங்­கள் ஏதும் நிகழ்ந்­த­னவா என்று நீ சூன் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கேரி டான் எழுப்­பிய கேள்­விக்கு திரு ஸாக்கி பதி­ல­ளித்­தார்.

பாது­கா­வல் துறை, துப்­பு­ர­வுத் துறை, நில­வ­னப்பு வடி­வ­மைப்­புத் துறை ஆகி­ய­வற்­றில் பணி­பு­ரி­யும் அனு­ப­வ­மிக்க ஊழி­யர்­கள், முதிய ஊழி­யர்­கள் ஆகி­யோர் குறித்து அவர் கேள்வி எழுப்­பி­னார். இத்­த­கை­யோர் மொழி­ய­றி­வுக் குறை­வால் தகு­திச் சான்­றி­த­ழுக்­கான தேர்­வில் தேர்ச்சி பெறா­மல், பதவி இறக்­கம் அல்­லது ஊதி­யக் குறைப்­புக்கு ஆளா­யி­னரா என்று திரு­வாட்டி டான் கேட்­டார்.

இத்­த­கைய சம்­ப­வங்­களை மனி­த­வள அமைச்சு எவ்­வாறு கையாள்­கிறது, இவ்­வாறு நேர்ந்­தால் ஊழி­யர்­கள் என்ன செய்­ய­வேண்­டும் என்­றும் அவர் வினா எழுப்­பி­னார்.

இவற்­றுக்­குப் பதி­ல­ளித்த திரு ஸாக்கி, இது­வரை மனி­த­வள அமைச்சு, ஸ்கில்ஸ் ஃபியூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்பு, துப்­பு­ரவு, பாது­கா­வல், நில­வ­னப்பு வடி­வ­மைப்பு ஆகிய துறை­கள் சார்ந்த அமைப்­பு­கள் என எங்­கும் இத்­த­கைய சம்­ப­வங்­கள் குறித்­துப் புகா­ர­ளிக்­கப்­ப­ட­வில்லை என்று கூறி­னார்.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­ப­ள­மு­றை­யின்­கீழ் வழங்­கப்­படும் பயிற்­சி­களில் மொழி­ய­றி­வுக் குறை­வால் தேர்ச்சி பெறா­த­தால் சவால்­களை எதிர் நோக்­கும் ஊழி­யர்­கள் ஸ்கில்ஸ் ஃபியூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்­பி­டம் உதவி நாட­லாம் என்று தெரி­வித்­தார். நியா­ய­மற்­ற­மு­றை­யில் நடத்­தப்­பட்­ட­தாக உண­ரும் ஊழி­யர்­கள் அவர்­க­ளின் தொழிற்­சங்­கத்­தையோ மனி­த­வள அமைச்­சையோ அணு­க­லாம் என்­றார் அவர்.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­ப­ள­முறை­யின்­கீழ், குறைந்த வரு­வாய் ஈட்­டும் ஊழி­யர்­க­ளுக்கு வேலை, பயிற்சி மேம்­பாட்டு உதவி வழங்­கப்­ப­டு­வ­தாக திரு ஸாக்கி குறிப்பிட்டார்.

ஒரு வேலைக்கான திறன் ஊழியரிடம் இல்லாதபட்சத்தில் முதலாளிகள் அவர்களை வேறு பொருத்தமான வேலையில் பணியமர்த்தலாம் என்றார் அவர்.