பாலியல் ஊக்க மருந்துகள் பறிமுதல்

1 mins read
4b6fa65a-aad0-430c-a5b5-faca3799ac08
-

இந்த ஆண்­டின் முதல் ஐந்து வாரங்­களில், கிட்­டத்­தட்ட 39,000 பாலி­யல் ஊக்க மருந்­து­களை குடி­நு­ழைவு, சோத­னைச் சாவ­டி­கள் ஆணைய அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­துள்­ள­னர்.

சென்ற மாதம் 3, 14 ஆகிய தேதி­களில் பாசிர் பாஞ்­சாங் சோதனை நிலை­யத்­தில் வந்­தி­றங்­கிய சரக்­குக் கொள்­க­லன்­களில் சந்­தே­கத்­துக்­கு­ரிய பொருள்­கள் இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் கரு­தி­னர். அதன் பிறகு சோதனை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இவற்­றில் சென்ற மாதம் 3ஆம் தேதி 17,000 பாலி­யல் ஊக்க மருந்­து­களும் 14ஆம் தேதி இத்­த­கைய 19,000 ஊக்க மருந்­து­களும் பிடி­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இம்­மா­தம் 4ஆம் தேதி, மேலும் 3,000 பாலி­யல் ஊக்க மருந்­து­களை சாங்கி விமான நிலைய சரக்கு மையத்­தில் இருந்து குடி­நு­ழை­வுச் சோத­னைச் சாவ­டி­கள் ஆணைய அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர். இவைகுறித்து சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தி­டம் தெரி­விக்­கப்­பட்­ட­து.

நம்­ப­க­மற்ற விற்­ப­னை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து பாலி­யல் ஊக்க மருந்­து­களை வாங்­கிப் பயன்­ப­டுத்­தி­னால் ஆபத்து நேரலாம். சில நேரங்­களில் உயி­ரி­ழக்­க­வும் நேரி­டும் என்று ஆணை­யம் நினை­வு­றுத்­தி­யது.