வரவுசெலவுத் திட்டத்தில் கூடுதல் ஆதரவு; நிறுவனங்களிடையே நம்பிக்கை

வரவுசெலவுத் திட்டத்தில் கூடுதல் ஆதரவு; நிறுவனங்களிடையே நம்பிக்கை

3 mins read
f301c627-cb62-4989-b2e6-3798bdb33eaf
-

ஆ. விஷ்ணு வர்­தினி

கடந்த ஆண்­டு­களில் வர்த்­த­கங்­கள் எதிர்­நோக்­கிய சில சிக்­கல்­ க­ளை இவ்­வாண்டு வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் வெளி­யி­டப்­பட்ட சில அறி­விப்­பு­கள் தீர்த்து வைக்­கும் என்று வர்த்­த­கர்­கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர். அதே நேரம் தங்­கள் செல­வு­கள் அதி­க­ரிக்­க­லாம் என்­றும் சிலர் கருதுகின்றனர்.

துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான திரு லாரன்ஸ வோங் நேற்று முன்­தி­னம் தாக்­கல் செய்த இவ்­வாண்­டின் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் பொரு­ளி­யலை ஊக்குவிக்கும் நோக்­கில் சிறிய, நடுத்­தர வர்த்­த­கங்­க­ளுக்கு சாத­க­மான அர­சாங்க ஆத­ர­வுத் திட்­டங்­களை அறி­வித்­தார்.

நோய்ப்­ப­ர­வல் காலத்­தின் நிலை­யற்ற சூழ­லி­லி­ருந்து மீட்சி அடைந்து கரை­யேற முயன்ற வர்த்­த­கங்­களை வளர்ச்­சிப் பாதை­யில் செலுத்­தும் வகை­யில் வரவு செலவுத் திட்­டம் அமைந்­துள்­ள­தாக சிங்­கப்­பூர் இந்­திய வர்த்தக, தொழில் சபை­யின் தலை­வர் நீல் பரேக் தெரி­வித்­தார்.

தேவை­யான நிதி ஆத­ரவை வங்­கி­க­ளி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­வ­தில் உள்ள சிக்­கல்­க­ளா­லும் மின்­சார, தண்­ணீர்க் கட்­டண உயர்­வால் செல­வு­கள் அதி­க­ரித்­த­தா­லும் வர்த்­த­கர்­கள் அலைக்­க­ழிக்­கப்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

இந்­நி­லை­யில், நீட்­டிக்­கப்­பட்டுள்ள தொழில்­நி­று­வன நிதி ஆதரவுத் திட்­டத்­தை­யும் எரி­சக்தி செயல்­தி­றன் திட்­டத்­தை­யும் முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள் ளும்­படி திரு பரேக் வர்த்­த­கர்­களை ஊக்­கு­வித்­தார். அத்­திட்­டங்­கள் 2024 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

புதிய வர்த்­த­கம் அமைக்­க­வும் நடை­முறை மூல­த­னத்­துக்­கும் கடன்­பெற தொழில்­நி­று­வன நிதி ஆத­ரவுத் திட்­டம் உத­வு­கிறது. நிறு­வ­னங்­கள், குறைந்த மின்­சா­ரம் பயன்­ப­டுத்­தும் செய­லாற்­றல்­மிக்க சாத­னங்­களை வாங்க உண­வுச் சேவை, உணவு உற்­பத்தி, சில்­லறை வர்த்­த­கத் துறை நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வும்.

அர­சாங்­கம் நிறு­வ­னங்­க­ளுக்­காக ஒதுக்­கி­யுள்ள நிதி ஊக்­க­ம­ளித்­தா­லும், குறிப்­பிட்ட, 'நம்­பிக்­கைக்­கு­ரிய' வர்த்­த­கங்­களே பெரும்­பா­லும் பய­ன­டை­யக்­கூ­டும் என நம்­பு­வ­தாக லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டைமை சங்­கத்­தின் கௌரவ செய­லா­ளர் ருத்­ரா­பதி பார்த்­த­சா­ரதி குறிப்­பிட்­டார்.

தகு­தி­பெ­றும் வர்த்­த­கங்­கள் குறித்து கூடு­தல் தக­வல்­கள் கிட்­டும்­போ­து­தான் இதன் தாக்­கம் புலப்­படும் என்று அவர் கூறி­னார்.

ஊழி­யர்­க­ளின் திறன் மேம்­பாட்­டுக்­கும், மூத்த ஊழி­யர்­க­ளுக்­கான பயிற்­சிக்­கும் ஆத­ரவு மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஆத­ரவு இருந்­தபோதும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கங்­களுக்கு உள்­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான பற்­றாக்­குறை இருப்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

"இச்­சிக்­க­லைக் களை­வ­தற்கு நேரடி ஆத­ரவு இருந்­தால் சிறப்பு. வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் மனி­த­வள அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீட்­டின் மேல்­வி­வ­ரங்­களை எதிர்­பார்த்­துள்­ளோம்," என்­றார் அவர்.

இதற்­கி­டையே, புகை­யி­லைப் பொருள்­க­ளுக்­கான 15% சுங்க வரி உயர்வு பல­ச­ரக்குக் கடை­ க­ளின் வர்த்­த­கத்­தைப் பாதிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஏறக்­கு­றைய 30 ஆண்டுகளாக இயங்­கி­வ­ரும் எல். எஸ். லக்‌ஷ்மி கடைக்கு இது புதி­தல்ல.

"சுங்க வரி முன்பு 10 விழுக்­காடு உயர்த்­தப்­பட்­ட­போது வியா­பா­ரம் ஓர­ளவு பாதிக்­கப்­பட்­டது. இப்­போது விலை மேலும் கூடு­கிறது. அத­னால் புகை­யிலை பொருள்­க­ளின் தேவையா என்று வாடிக்­கை­யா­ளர்­கள் இனி மறு­ ப­ரி­சீ­லனை செய்ய தொடங்­கி­ வி­டு­வர். எங்­கள் வாடிக்­கை­யாளர்­களில் பெரும்­பான்­மை­யி­ன­ரான வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மனம் மாறக்­கூ­டும்," என்­றார் கடை உரி­மை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான திரு­வாட்டி இந்­து­மதி.

சுங்க உரி உயர்­வால், மாதந்­தோ­றும் $300 வரை மொத்த வரிக் கட்­ட­ணம் அதி­க­ரிக்­க­வுள்­ள­தாக அவர் கூறி­னார்.

கொவிட்-19 பாதிப்­புக்­குப் பின்­னர் அண்­மைக்­கா­ல­மாக சூடு­பிடித்த வர்த்­த­கம் மீண்­டும் மந்­தம் அடை­ய­லாம் என்று அவர் வருத்­தத்­து­டன் கூறி­னார்.

பண­வீக்­கம், ஊழி­யரை வேலை­யில் சேர்க்­கும் செல­வு­கள் உயர்ந்­துள்­ளது, அதிக வட்டி விகி­தம் முத­லி­யவை நிறு­வ­னங்­க­ளின் செயல்­பா­டு­க­ளைப் பாதித்து வரும் சூழ­லில், அர­சாங்­கத்­தின் நிதி ஆத­ரவு வர­வேற்­கத்­தக்­கத்து என்று சிங்­கப்­பூர் உற்­பத்­தித் துறை சம்­மே­ள­னம் கூறி­யுள்­ளது.

குறிப்­பிட்­ட புத்­தாக்க செயல்­பா­டு­க­ளுக்கு வரிக் கழிவு வழங்­கும் புதிய தொழில்­நி­று­வன புத்­தாக்­கத் திட்­டம் ஆய்வு முயற்சி களுக்கு வித்­தி­டும் என்­றும் அது நம்­பிக்கை தெரி­வித்­தது.

உல­க­ள­வில் தங்­களை வேறு படுத்­திக் கொள்­வ­தற்கு புதுச் சேவை­க­ளை­யும் பொருள்­க­ளை­யும் முன்­வைக்க தொடர்ந்து உயர்­கல்­விக் கழ­கங்­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டப் போவ­தாக சம்­மே­ள­னம் குறிப்­பிட்­டது.