ஆப்பிள் சாதனங்களைத் தாக்கும் ஊடுருவிகள்

ஆப்பிள் சாதனங்களைத் தாக்கும் ஊடுருவிகள்

1 mins read
fa9c1d55-4a27-4c5d-934f-9dc4a69af3cc
ஊடு­ரு­வி­க­ளி­டம் இருந்து பாது­காத்­துக்­கொள்ள அண்­மைய பாது­காப்பு புதுப்­பிப்­பு­களை செய்யு­மாறு ஆப்­பிள் பய­னா­ளர்­கள் அறிவுறுத்தப்படுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

ஊடு­ரு­வி­க­ளி­டம் இருந்து பாது­காத்­துக்­கொள்ள அண்­மைய பாது­காப்பு புதுப்­பிப்­பு­களை செய்யு­மாறு ஆப்­பிள் பய­னா­ளர்­கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்தப் பாதிப்பு 'வெப்கிட்' குழப்பநிலை ஆக வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது என்று சிங்­கப்­பூர் கணி­னிப் பாதுகாப்பு அவ­ச­ர­காலச் செயற்­குழு (SingCert) நேற்று முன்­தி­னம் வெளியிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்ளது.

பாத­க­மேற்­ப­டுத்­தக்கூடிய இணையத் தர­வைப் பயன்­படுத்தி, பய­னா­ள­ர்களின் சாத­னத்­தில் குறி­யீடு, வேவு பார்க்­கும் மென்­பொருள் அல்­லது பாத­க­மான கணினி செயல்­பாட்டுக் கட்­ட­ளை­களை ஊடு­ரு­வி­கள் புகுத்த முடியும். அதன் மூலம் சாதனத்தை செயல்பாட்டு கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

வெப்­கிட் என்­பது, ஆப்­பிள் செய­லி­க­ளான சஃபாரி, ஆப் ஸ்டோர் போன்­ற­வற்றை இயக்­கும் ஓர் இணைய உலாவி.

ஐபேட் புரோ (அனைத்து மாடல்­களும்), ஐஃபோன் 8, ஐபேட் ஏர் 3வது தலை­முறை, ஐபேட் 5வது தலை­முறை, ஐபேட் மினி 5வது தலை­முறை ஆகி­ய­வை­யும் அவற்­றின் மேம்­பட்ட பதிப்­பு­கள் ஆகி­ய­வற்­றை­யும், குறிப்­பிட்ட ஆப்­பிள் கணி­னி­களை­யும் இது பாதிப்­ப­தா­க அந்த அறிக்கையில் கூறப்­ப­ட்டுள்­ளது.