வாடிக்கையாளர் தவறவிட்ட பணத்தைப் பாதுகாத்து ஒப்படைத்த உணவுக்கடைக்காரர்

1 mins read
5ea8c92f-d412-4c44-bcff-81542140aa35
-

ஜூரோங் வெஸ்ட்­டில் பக் குத் தே விற்­கும் கடை நடத்­தி­வ­ரு­கிறார் திரு­வாட்டி ஜெலின் வூன் (படம்).

இம்­மா­தம் 4ஆம் தேதி, தன் கடைக்கு முன்­னால் இருக்­கும் மேசை­யில் தோளில் மாட்­டும் பை ஒன்றை யாரோ விட்­டுச் சென்­றதைக் கண்­டார். அதை எடுத்­துப் பார்த்­த­போது உள்ளே பெரிய கட்­டாக $100 நோட்­டு­கள் இருந்­த­தைப் பார்த்து வியந்­தார். எவ்­வ­ளவு தொகை என்று இவர் எண்­ணிப் பார்க்­க­வில்லை.

அந்த மேசை­யில் ஆட­வர் ஒரு­வர் உணவு உண்­டது திரு­வாட்டி வூனுக்கு நினைவு வந்­தது. ஒரு­வேளை அந்த ஆட­வர் பணத்­தைத் தேடித் திரும்பி வரக்­கூ­டும் என்று எதிர்­பார்த்து பையைப் பாது­காப்­பாக வைத்­தார்.

பணத்­தைத் தவ­ற­விட்­ட­வர் கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரம் கழித்தே தனது அலட்­சி­யத்தை நொந்­த­வாறு திரும்­பி­வந்­தார். அது கிடைக்­கும் என்று அவ­ருக்கு நம்­பிக்கை இல்லை.

திரு­வாட்டி வூன் பணப்­பை­யைத் தந்­த­போது அவ­ருக்கு மிகப் பெரிய ஆறு­தல் கிட்­டி­யது.

தன்­னைத் திரு பே என்று அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்ட ஆட­வர், அந்­தப் பையில் $13,000 ரொக்­கம் இருந்­த­தா­க­வும் அது தன் தம்­பி­யின் இறு­திச் சடங்­குக்­கா­னது என்­றும் தெரி­வித்­த­தாக அவர் கூறி­னார்.

திரு பே தனது உற­வி­னர் என்று, 'ஸ்டாம்ப்' தளத்­தில் குறிப்­பிட்­டுள்ள வாச­கர் ஒரு­வர், கிடைக்­கவே கிடைக்­காது என்று எண்­ணி­யி­ருந்த பணப்பை கிடைத்­தது என்­றும், அதில் இருந்த பணம் பாது­காப்­பாக அப்­ப­டியே இருந்­தது என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

திரு­வாட்டி வூனின் கனிவு, நேர்மை ஆகிய பண்­பு­களை அவர் பாராட்­டி­யுள்­ளார்.