'செம்ப்மரின் - கெப்பல் ஓ அண்ட் எம்' இணைப்புக்கு 95% பங்குதாரர்கள் ஆதரவு

'செம்ப்மரின் - கெப்பல் ஓ அண்ட் எம்' இணைப்புக்கு 95% பங்குதாரர்கள் ஆதரவு

1 mins read
87a429bd-00c2-4255-9720-2b8b176f47a8
'செம்ப்­ம­ரின்' நிறு­வ­னத்தை 'கெப்­பல் ஓ அண்ட் எம்' நிறு­வ­னத்­து­டன் இணைப்­ப­தற்கு 95 விழுக்­காட்­டிற்கு அதி­க­மான பங்­கு­தா­ரர்­கள் ஒப்­பு­தல் அளித்து உள்­ள­னர். படம்: செம்ப்கார்ப் மரீன் -

'செம்ப்­ம­ரின்' நிறு­வ­னத்தை 'கெப்­பல் ஓ அண்ட் எம்' நிறு­வ­னத்­து­டன் இணைப்­ப­தற்கு 95 விழுக்­காட்­டிற்கு அதி­க­மான பங்­கு­தா­ரர்­கள் ஒப்­பு­தல் அளித்து உள்­ள­னர்.

ஓராண்டு நீடித்த இழு­ப­றிக்­குப் பிறகு இவ்­வாறு முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

மெய்­நி­கர் முறை­யில் நேற்று இடம்­பெற்ற பொதுக் கூட்­டத்­தில் இது தொடர்­பான $4.5 பில்­லி­யன் ஒப்­பந்­தத்­திற்கு 95.28 விழுக்­காட்­டுப் பங்­கு­தா­ரர்­கள் ஆத­ரவு தெரி­வித்­த­னர்.

இணைப்­புக்கு 50 விழுக்­காட்­டுக்­கு­ மே­லான பங்­கு­தா­ரர்­க­ளின் ஒப்­பு­தல் தேவை­யாக இருந்­தது. 'செம்ப்­ம­ரின்' நிறு­வ­னத்­தில் 54.6 விழுக்­காட்­டுப் பங்­கு­களை வகிக்­கும் அர­சாங்க முத­லீட்டு நிறு­வ­ன­மான தெமா­செக், வாக்­க­ளிப்­பில் கலந்­து­கொள்­ள­வில்லை.

இணைப்­புக்­குப் பிந்­திய புதிய நிறு­வ­னத்­தில் அது 35.5 விழுக்­காட்­டுப் பங்­கு­களை வகிக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

'கெப்­பல்' நிறு­வ­னப் பங்­கு­தா­ரர்­களில் 99.6 விழுக்­காட்­டி­னர் சென்ற டிசம்­பர் 8ஆம் தேதி இணைப்­புக்கு ஆத­ரவு தெரி­வித்­த­னர்.

'கெப்­பல்' நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி கிறிஸ் ஓங், புதிய விரி­வு­ப­டுத்­தப்­பட்ட நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யா­கப் பணி­பு­ரி­வார்.

கடந்த 2009ஆம் ஆண்­டி­லி­ருந்து 'செம்ப்­ம­ரின்' நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வா­கி­யா­கச் செயல்­படும் வோங் வெங் சுன், தற்­கா­லிக மூத்த ஆலோ­ச­க­ரா­கச் செயல்­ப­டு­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இணைப்­புக்­குப் பிறகு உரு­வா­கும் புதிய நிறு­வ­னம், உல­கின் ஆகப் பெரிய கடல்­துறை நிறு­வ­னங்­களில் ஒன்­றாக விளங்­கும். அதில் 'செம்ப்­ம­ரின்' 46% பங்­கு­க­ளை­யும் 'கெப்­பல்' 54% பங்­கு­க­ளை­யும் கொண்­டி­ருக்­கு­மெ­னக் கூறப்­ப­டு­கிறது.