திரு முகமது ஹைக்கல் கடந்த 9ஆம் தேதி காலை தேநீரில் பிஸ்கெட்டை நனைக்கச் சென்றபோது, அந்த பிஸ்கெட்டில் இறந்துபோன பூச்சியின் எச்சத்தைக் கண்டார். செங்காங் அங்காடிக் கடை ஒன்றில் ஒரு வாரத்துக்கு முன் வாங்கிய ஹப் செங் நிறுவனத்தின் அந்த பிஸ்கெட்டை அவர் தூக்கிவீசினார்.
முதலில் பிஸ்கெட்டில் இருந்தது மை என்று தாம் நினைத்ததாகவும் உற்றுப் பார்த்தபிறகுதான் அது பார்ப்பதற்கு கரப்பான்பூச்சியின் உலர்ந்துபோன எச்சம்போல இருந்ததாகவும் திரு முகமது பிப்ரவரி 9 அன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
அவரது பதிவிட்ட புகைப் படங்களில் பிஸ்கெட்டின் மேலே ஒரு பூச்சியின் கால்களும் மார்புப் பகுதியும் இருந்ததுபோல தெரிந்தது.
பிஸ்கெட் பாக்கெட் வரும் டிசம்பரில் காலாவதியாகும்.
மலேசியாவைச் சேர்ந்த நன்கறிந்த நிறுவனமான ஹப் செங்கிடம் சம்பவம் பற்றி கருத்துக் கேட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
சிங்கப்பூர் உணவு அமைப்பு, அந்த விவகாரத்தைப் பற்றி விசாரித்துவருவதாகக் கூறியுள்ளது. உணவு நிறுவனங்கள் தவறு செய்திருப்பதாகக் கருதினால் பொதுமக்கள் www.sfa.gov.sg/feedback எனும் இணையவழி படிவத்தில் தெரிவிக்கலாம் என்று அது சொன்னது.
கடந்த 8ஆம் தேதி டான் டான் டான்கி எனும் ஜப்பானிய உணவகத்திலிருந்து வாங்கிய சாஷிமி உணவுவகையில் புழு இருந்ததை மாது ஒருவர் கண்டுபிடித்தார்.

