எல்லைகளில் பயணிகள் கடப்பதற்கு கூடுதல் தானியங்கி குடிநுழைவு முகப்புகள்

எல்லைகளில் பயணிகள் கடப்பதற்கு கூடுதல் தானியங்கி குடிநுழைவு முகப்புகள்

2 mins read
48dfbafe-8f6e-44b7-badb-988e1e58b0ee
-

குடி­நு­ழைவு, சோதனைச் சாவடி கள் ஆணை­யம் சிங்­கப்­பூர் எல்­லை­களில் பய­ணி­க­ளுக்­கான கூடு­தல் தானி­யங்கி குடிநுழைவு முகப்­பு ­க­ளை­யும் சரக்­கு­களை அனு­ம­திக்­கத் துரி­த­மாக அனு­ம­திக்க புதிய முறை­யை­யும் கடந்த ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. 2022ல் எல்­லை­கள் திறக்­கப்­பட்டு உலக வர்த்­த­கம் வேக­ம­டைந்த நிலை­யில் இந்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

தானி­யங்கி குடி­நு­ழைவு அனு­மதி கடந்த ஆண்டு மே மாதம் தொடங்­கப்­பட்­டது. அதன்­வழி முதன்­மு­றை­யாக சிங்­கப்­பூ­ருக்குள் நுழை­யும் தகு­தி­பெற்ற வெளி­நாட்­டுப் பய­ணி­கள் தானி­யங்கி முகப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்த குடி­நு­ழைவு அனு­மதி பெற்று வரு­கின்­ற­னர்.

அதற்கு அவர்­கள் தானி­யங்கி முகப்­பு­க­ளைக் கடக்­கும்­போது தங்­கள் அங்க அடை­யாங்­களை வழங்க வேண்­டும். தனி­யாக முன்­ப­திவு செய்­யத் தேவை­யில்லை.

மேலும், சென்ற டிசம்­பர் மாதத்­தி­லி­ருந்து சக்­கர நாற்­கா­லி­யில் உள்­ள­வர்­களும் அவர்­க­ளின் குடும்­பத்­தா­ரும் சாங்கி விமான நிலை­யத்­தின் குறிப்­பிட்ட பய­ணி­கள் கூடங்­களில் தானி­யங்கி குடி­நு­ழைவு அனு­மதி முகப்­பு­ களைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

அத்­த­கை­யோர் தானி­யங்கி முகப்­பு­களில் தங்­கள் பாஸ்­போர்­டு­க­ளைக் காட்ட வேண்­டும். பிறகு் முகப்­பு­களில் உள்ள புகைப்­ப­டக் கரு­வி­க­ளி­லும் அங்க அடை­யா­ளப் பதி­வுக் கரு­வி­க­ளி­லும் அவர்­கள், தங்­கள் கரு­விழி மற்­றும் அங்க அடை­யா­ளங்­க­ளைப் பதி­வு­செய்­து­கொள்ள வேண்­டும்.

2022ல் சிங்­கப்­பூர் எல்­லை­களில் மொத்­தம் 125 தானி­யங்கி முகப்­பு­கள் அமைக்­கப்­பட்­டன. இவ்­வாண்டு இன்­னும் 61 தானி­யங்கி முகப்­பு­களை அமைக்­கத் திட்­ட­மி­டு­வ­தாக ஆணை­யம் நேற்று கூறி­யது.

இதற்­கி­டையே, சரக்­கு­க­ளுக்­குத் துரி­த­மாக அனு­மதி வழங்க, விமான நிலை­யம், துறை­மு­கங்­கள் ஆகி­ய­வற்­றில் வழக்­க­மான சரக்கு வாக­னங்­க­ளுக்கு காகிதமற்ற அனு­ம­தி­ய­ளிக்­கும் முறையை குடி­நு­ழைவு, சோதனைச் ­சா­வடிகள் ஆணை­யம் அறி­மு­கம் செய்­துள்­ளது.

சரக்கு வாக­ன­மோட்­டி­கள் முன்­பு, நுழைவு அனு­மதி, துணை ஆவ­ணங்­க­ளின் காகிதப் பிர­தி­களை சோதனைச் சாவ­டி­களை ஒப்­ப­டைக்க வேண்­டி­யி­ருந்­தது.

தற்­போது வாக­ன­மோட்­டி­கள், வாக­னங்­கள் எல்­லைச்­சா­வ­டியை அடை­யும் முன்­னர் தங்­கள் ஓட்டு­நர் உரிம எண்­ணை­யும் சரக்கு நுழைவு அனு­மதி எண்­ணை­யும் எஸ்ஜிஅரை­வல் மின் சேவை­யின்வழி பதிவு செய்­தால் போதும்.

ஆணை­யத்­தின் அதி­கா­ரி­கள் அனு­மதி வழங்க விவ­ரங்­களை சரி­பார்ப்­பர். இத­னால் சரக்கு வாக­னங்­கள் நுழைவு அனு­மதி பெறும் நேரம் ஒரு வாக­னத்­துக்கு இரண்டு நிமி­டம் குறைந்­துள்­ள­தாக ஆணை­யம் கூறி­யது.