மகப்பேற்றின்போது தாய்மார் மனநலன் பேண உதவும் வழிகாட்டி

மகப்பேற்றின்போது தாய்மார் மனநலன் பேண உதவும் வழிகாட்டி

2 mins read
d2720129-607c-4036-bf0d-533840bf274f
-

பெருந்­தொற்­றின்­போது மகப்­பேற் றுக்­குப் பிந்­தைய மனச்­சோர்வு ஏற்­பட்ட சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­ததை கவ­னித்த கேகே மக­ளிர் சிறார் மருத்­து­வ­மனை, மக­ளிர்க்­கான புதிய மருத்­துவ வழி­காட்­டி­களை வெளி­யிட்­டுள்­ளது.

கரு­வுற்ற பெண்­கள், புதிய தாய்­மா­ருக்கு மன­ந­லப் பிரச்­சி­னை­கள் இருப்­பதை விரை­வாக கண்­டு­பி­டித்து சிகிச்சை அளிக்க பரி­சோ­த­னை­கள் முக்­கி­யம் என்­பதை வழி­காட்­டி­கள் கூறும்.

2019 ஏப்­ரல் முதல் 2020 மார்ச் வரை­யி­லான கால­கட்­டத்­தை­விட 2020 ஏப்­ரல் முதர் மார்ச் 2021 வரை மகப்­பேற்­றுக்­குப் பிந்­தைய மனச்­சோர்வு ஏற்­பட்ட சம்­ப­வங்­கள் 47 விழுக்­காடு உயர்ந்­த­தாக கேகே மருத்­து­வ­மனை கூறி­யது.

கொவிட்-19 தொற்று முன்­னர் மகப்­பேற்­றுக்­குப் பிந்­தைய மனச்­சோர்­வால் சிங்­கப்­பூ­ரில் 14 பெண்­களில் ஒரு­வ­ருக்­கும் எட்டு பெண்­களில் ஒரு­வ­ருக்­கும் கரு­வுற்ற போது மனச்­சோர்வு ஏற்­பட்­டது.

கரு­வுற்­ற­வர்­கள், புதிய தாய்­மார் ஆகி­யோர் என 600 பெண்­க­ளி­டம் ஆய்வு நடத்­திய கேகே மருத்­து­வ­மனை, ஆறு பேரில் ஒரு­வர்­தான் மனச்­சோர்வு அறி­கு­றி­கள் தென்­பட்­டால் உதவி நாடு­வர் என்று கண்­ட­றிந்­தது.

ஐவ­ரில் மூவர் மருத்­து­வர் தங்­க­ளுக்கு மன­நல ஆலோ­சனை வழங்­க­வில்லை என்று கூறி­னர்.

மகப்­பேறு மருத்­து­வர்­க­ளி­டம் நடத்­தப்­பட்ட மற்­றோர் ஆய்­வில், 90 விழுக்­காட்­டுத் தாய்­மார் பிள்­ளைப்­பேற்­றுக்­குப் பின் மனச்­சோர்வு அறி­கு­றி­க­ளைப் பற்றி மருத்­து­வர்­க­ளி­டம் தெரி­விக்­க­வில்லை என்று கூறி­யது.

வழி­காட்­டி­களை நேற்று நடந்த ஆசிய பசி­பிக் பிள்­ளைப்­பேறு, குழந்­தை­நல மாநாட்­டில் சுகா­தார மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி வெளி­யிட்­டார்.

மன­ந­லன் மாற்­றங்­க­ளை­யும் பதற்­றம், மனச்­சோர்வு ஆகி­ய­வற்­றைக் கண்­டு­கொள்­ளத் தேவை­யான திறன் களை­யும் பெண்­க­ளுக்­கும் அவர்­கள் குடும்­பத்­தா­ருக்­கும் வழங்­கு­வது முக்­கி­யம் என்­பதை ஆய்வு காட்­டி­யுள்­ள­தாக அவர் கூறி­னார்.