தேசிய நினைவுச் சின்னமாக விளங்கும் கேத்தே கட்டடம் புத்துயிரூட்டும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மூடப்படும் என்று அந்தக் கட்டட உரிமையாளர்களான கேத்தே நிறுவனம் நேற்றுக் கூறியது.
கேத்தே கட்டடம் கடந்த 2003ஆம் ஆண்டு, அதன் வெளித்தோற்றம் தவிர, உட்புறம் மேம்பாடு கண்டது. அதற்குப் பிறகு இப்பொழுதுதான் அது மீண்டும் மேம்படுத்தப்படுகிறது.
கேத்தே கட்டடத்தின் மேம்பாடு அருகிலுள்ள டோபி காட் பகுதியும் அதன் சுற்றுப்புறமும் புது வடிவம் பெறுவதற்கு ஆதரவு தரும் விதத்தில் அமையும் என்று குறிப்பிட்ட கேத்தே நிறுவனம், சிங்கப்பூரின் மாறிவரும் தோற்றத்திற்கு கேத்தே கட்டடம் முன்னோடியாக விளங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.

